Sunday, May 08, 2005

இங்கிலாந்தில் தேர்தல்..

எனக்கு தெரிந்த அனைத்து பிரிட்டிஷ் நண்பர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
எனக்கும் மிகவும் ஆச்சரியம் தான்.

ஏனென்று கேட்கிறீர்களா?. இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து காமன்வெல்த் நாட்டு பிரஜைகளுக்கும் இங்கு ஓட்டு உரிமை உள்ளது.

சரி, ஓட்டு போடலாம். யாருக்கு போடுவது என்பதில் ஒரே குழப்பம். இருப்பது மூன்றே கட்சிகள்.

1) லேபர் - இராக் போரினால் டோனி பிளேர் மீது கோபம். ஆனால் இவரது ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.
2) கன்செர்வேடிவ் - இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கு இருக்கும் அனைத்து வெளி நாட்டவரையும் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பயம்.
3) லிபரெல் டெமாக்ரேட் - மேலே இருக்கும் இருவரையும் பிடிக்காதவர்கள் இவர்களுக்கு வோட்டு போடலாம்.

இன்னோரு ஆச்சரியமான விஷயம். தேர்தல் தினத்தன்று இங்கு விடுமுறை கிடையாது.
மேடைப்பேச்சு கிடையாது. கட் அவுட் சமாச்சரங்கள் கிடையாது.

என்ன தேர்தலோ போங்கள்.

4 Comments:

Blogger Unknown said...

//தேர்தல் தினத்தன்று இங்கு விடுமுறை கிடையாது.
மேடைப்பேச்சு கிடையாது. கட் அவுட் சமாச்சரங்கள் கிடையாது//

கள்ள வோட்டு?.

May 08, 2005 11:54 pm  
Blogger அன்பு said...

அதான்னே... என்னடா தேர்தலைப் பத்தியாருமே எழுதலையேன்னு நினைச்சேன். அதென்னங்க... புஷ் வருவாரா... மாட்டாரா என்று சந்தேகப்பட்டாங்க... இழுபறி இருந்தது.

தேர்தல் நடந்ததே தெர்ல, பிளேர்... கலக்கலா வந்து செர்ரியோட கை காட்டுறாரு... அவ்ளோ செல்வாக்கா !(அல்லது வழியில்லையா?)

பிளேருக்கு நம்ப வாழ்த்தையும் சொல்லுடுங்க:)

May 09, 2005 5:01 am  
Blogger Suresh said...

கள்ள ஓட்டா?... ஆங்கிலத்தில் கள்ள ஓட்டுக்கு என்னங்க?

May 09, 2005 10:51 pm  
Blogger Unknown said...

illegal voting

May 10, 2005 12:50 am  

Post a Comment

<< Home