Friday, July 22, 2005

இங்கிலாந்தில் தற்போதைய நிலவரம் - ஒரு அலசல்

லண்டனில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்சிக்கு பிறகு இங்கு நிலவரம் மற்றும் இங்கிலாந்து மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியான என்னுடைய பதிவு.

ஒட்டு மொத்த நிலவரம்:
இரண்டு வாரத்துக்கு முன்பு, நான்கு குண்டு வெடிப்புகள், 54 பேர் பலி, நூற்றுக்கணக்கணக்கானோர் காயம். இப்போது அதேபோல் நான்கு குண்டு வெடிப்பு முயற்சிகள், அதிர்ஷ்டவசமாக முயற்சிகள் தோல்வி, தோல்வியடைந்த முயற்சிகள் காரணமாக இங்குள்ள காவல் துறையினருக்கு அதிகமான தடயங்கள். குண்டுவெடிப்பு முயற்சியில் சம்பந்தப்பட்டவனை பிடிக்கும் முயற்சியில் ஒருவன் சுட்டுக்கொலை. நிராயுத பாணியாக இருந்திருந்தும்(அதிகாரபூர்வமற்ற செய்தி). இங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தனிமனித சுதந்திரம் மற்றும் நாளை நம்மையும் இதேபோல் சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்பது பற்றிய பயம்.
இது தான் இப்போதைய நிலவரம்.

லண்டனில் நிலவரம்:
லண்டனில், நான் பார்த்தவரை, நான் கேள்விப்பட்டவரை, இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படவில்லை. இரண்டு மூன்று பாதாள ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் அனைவரும் அவரவர் தினசரி பணிகளை புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன ஒன்று!! எல்லோரும் எல்லோரையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்தோடு தான் பார்த்து கொண்டு ரயிலில் மற்றும் பேருந்தில் பிரயாணிக்கிறார்கள். முடிந்தவரை சுமைகள் இல்லாமல் பிரயாணிக்கிறார்கள். லண்டனில் சுற்றுலாவினால் வரும் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களின் பிரதிபலிப்பு:
எப்போதும் போல ஊடகங்கள் எல்லாவற்றையுமே மிகைப்படுத்திதான் பிரதிபலிக்கும்.(அவர்களுக்கு அவர்களுடைய circulation பற்றிய கவலை). அவை அனைத்தும் இஸ்லாமிய மக்களை தனிமைபடுத்துவது போலவே செய்திகளை வெளியிடுகின்றன. முதலில் தீவிரவாதி பிரிட்டிஷ் குடிமகன் என்றன, பின்பு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் குடிமகன் என்றன. இப்போது பாகிஸ்தானி என்றே குறிப்பிடுகின்றன.

டோனி ப்ளேரின் நிலை:ஒரு புறம் தொடர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை சமாளித்தாக வேண்டிய சூழ்நிலை. மற்றொரு புறம், ஈராக் போரினால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று நிறைய பேர் குற்றம் சாட்டுகிறார்கள். சமாளித்தாக வேண்டும். சமாளித்து விடுவார். (அதுதான் அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலை ஆயிற்றே!)

இஸ்லாமியர்களின் மனநிலை:
யாரோ ஒரு தீவிரவாத மனப்பான்மையுடைய ஒரு கூட்டம் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? அவர்கள் ஏன் தனிமைப்படுத்தப்பட வேண்டும்? - என்பது தான் அவர்களின் கேள்வி, ஆதங்கம்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு:
நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர், பாகிஸ்தானை பூர்வீகமாக கோண்டவர்கள் மற்றும் அனைவரும் பாகிஸ்தானில் உள்ள மதராஸாக்களில் இஸ்லாம் பயிலுவதற்க்காக சென்றிருந்தவர்கள் என்பதால் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நெருக்கடி. அதிபர் முஸராப் சில அவசர சட்டங்களை இயற்றும்படி ஆயிற்று. அதே சமயத்தில் அவர் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார். தீவிரவாதிகள் அனைவரும் பிரிட்டிஷ் குடிமகன்கள். அதில் ஒருவன் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டவன். இங்கிலாந்து தீவிரவாதத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கட்ந்த காலத்தில் எத்தனை தீவிரவாத இயக்கங்களை தடை செய்துள்ளது?....(நியாயமான கேள்வி).

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் நிலை:
இங்குள்ள ஊடகங்களுக்கு இந்தியர்களோ அல்லது பாகிஸ்தானியர்களோ அல்லது பங்களாதேசிகளோ.. அனைவரும் ஏசியன்கள் தான். சில இடங்களில் சில பேர் 'பாகி' என்று தான் அனைவரையும் அழைப்பார்கள். பாகிஸ்தானிகளுக்கு எதிராக எந்த ஒரு செயல்பாடும் இங்கு வசிக்கும் இந்தியர்களையும் பாதிக்கும். ஒட்டு மொத்தத்தில் இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது நம் இந்தியர்கள் தான்.(தீவிரவாத் சம்பவங்களுக்கு எந்த வித moral responsibility-யும் இல்லையென்றாலும்..... ) ஆனால் இந்த அரசாங்கம் அந்த நிலையை ஏற்பட விடாது. நம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் இங்கு ஒட்டு மொத்த இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், மற்ற தொழில் துறையினரும் சமுதாயத்தில் கலந்து இருக்கிறார்கள். (மேலும் Curry food சாப்பிடாமல் இங்கிலாந்து மக்களுக்கு உயிர் வாழ முடியாது. :-)) )

இது தான் இப்போதைய ஒட்டு மொத்த நிலவரம். இதில் யாரையும் யாரும் குறை சொல்ல முடியாது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

8 Comments:

Blogger Adaengappa !! said...

Thanks for the update !!

TAKE CARE AND BE SAFE !!

July 23, 2005 1:34 am  
Blogger -/பெயரிலி. said...

/முதலில் தீவிரவாதி பிரிட்டிஷ் குடிமகன் என்றன, பின்பு பாகிஸ்தானை
பூர்வீகமாக கொண்ட பாகிஸ்தான் குடிமகன் என்றன. இப்போது பாகிஸ்தானி என்றே குறிப்பிடுகின்றன./

சிம்பாபேயிலே மனித உரிமை மீறலெனக் கத்தும் பிரித்தானியப்பத்திரிகைகளிலே பலவற்றிலே சுரண்டிப்பார்க்கும்போதுதான் உள்ளே இருக்கின்றது பித்தளையென்பது தெளிவாகும்.
ஆனால், கார்டியன், இண்டிபெண்டண்ட் கூடவா இப்படியாகப் பதிகின்றன? பொதுவாக, அமெரிக்க ஊடகங்களிலும்விட, பிரித்தானிய ஊடகங்கள் சாராமற் செய்தி வெளியிடுகின்றவை ஆயிற்றே

July 23, 2005 3:43 am  
Blogger NambikkaiRAMA said...

நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை உங்கள் மூலம் அறிகிறேன்.

July 23, 2005 5:15 am  
Blogger NambikkaiRAMA said...

நடு நிலையோடு உங்கள் பதிவு உள்ளது. உண்மை செய்திகளை உங்கள் மூலம் அறிகிறேன்.

July 23, 2005 5:15 am  
Blogger Suresh said...

அடேங்கப்பா,பெயரிலி,ராமா

அனைவருக்கும் நன்றி.

July 23, 2005 5:41 pm  
Blogger Machi said...

லண்டன் வாழ் அன்பரின் பதிவு மக்களின் மன நிலையை நன்றாக பதிவு செய்துள்ளது. பாராட்டுக்கள்.
இதை படித்ததும் என்னுள் சில கேள்விகள் கேட்டதையும் படித்ததையும் வைத்து.

1) ஏன் பாக்கிஸ்தானியரின் செயல் இந்தியரை பாதிக்கிறது? உலகம் அறியும் குறைந்தபட்சம் பிரிட்டனும் அமெரிக்காவும் அறியும், இந்திய பாக்கிஸ்தானிய சகோதரதுவத்தை.

2) இந்தியரின் பங்களிப்பால் பிரிட்டன் அடைந்த, அடைகின்ற பயன்கள் ஏராளம், ஏராளம். பாக்கிஸ்தானியரின் பங்களிப்பு உருப்படியாக ஒன்றும் இராது என்பது என் கருத்து அல்லது அது பற்றி ஊடகங்களில் அதிக செய்தி இல்லை. ஏன் பிரிட்டன் மக்கள் இந்தியரை விரோதமாக பார்க்கபோகிறார்கள்?

3) ஒரு பிரிட்டன் வாழ் மக்கள் சொன்னது... இந்த மாதிரி சமயங்களில் இந்திய ( இந்து மத) மகளிர் நெற்றியில் பெரிய குங்கும பொட்டு வைத்துக்கொள்வார்களாம் தங்களை பாக்கியிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட. இந்திய (இந்து) ஆண் எவ்வாறு தன்னை பாக்கியிடம் இருந்து வேறுபடத்தி காட்டிக்கொள்வான்? குறைந்தபட்சம் இந்த மாதிரி தருணங்களில்.

4) தற்போது இந்திய, இலங்கை மக்களின் மன நிலை எவ்வாறு உள்ளது? அச்சத்துடன் உள்ளார்களா அல்லது பாதுகாப்புனர்வுடன் உள்ளார்களா?

5) இப் பயங்கரவாத செயல் அவர்கள் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றும்?

July 25, 2005 5:41 pm  
Blogger Suresh said...

நன்றி குறும்பன்.

இந்தியர்கள் மேல் கண்டிப்பாக பிரிட்டிஷ் மக்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. ஆனால் நமது பிரச்சினை தோலின் நிறம் தான். பெரும்பாலோருக்கு இந்தியரையோ, பாகிஸ்தானியரையோ மற்ற ஆசியரையோ வித்தியாசப்படுத்த தெரியாது( நமக்கு எப்படி சீனரையோ,ஜப்பானியரையோ, கொரிய நாட்டவரை வித்தியாசப்படுத்த முடியாதோ அதே போல் தான்). அவர்களுக்கு நாம் இந்தியர்கள் என்று தெரிந்தால் விரோதமாக பார்க்க போவதில்லை.

ஆனால் அவர்களுக்கு இந்திய பாகிஸ்தான் உறவின் நிலமை நன்றாக தெரியும். குண்டு வெடிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஒரு முடி திருத்தகத்தில் முடிவெட்டுபவர் கேட்டார் 'உங்களுக்கு ஏன் பாகிஸ்தானியரை பிடிக்காது?' என்று. அதற்கு நான் 'உங்களுக்கு ஏன் பிரன்சு மற்றும் ஐரிஸ் நாட்டுக்காரர்களை பிடிக்காதோ அதே காரணம் தான்' என்றேன்.

>>>இந்த மாதிரி சமயங்களில் இந்திய >>>( இந்து மத) மகளிர் நெற்றியில் >>>பெரிய குங்கும பொட்டு >>>வைத்துக்கொள்வார்களாம்
:-)))
இங்கு நிலைமை அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. இது எந்த விதத்திலும் இந்திய இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மாற்றவில்லை மாறவும் மாறாது.

ஆனால் எதிர்காலத்தில் குடிபுகல் சட்டங்கள் கடினப்படுத்தப்படும். அவ்வளவுதான்.

July 25, 2005 8:35 pm  
Blogger Machi said...

ஷெப்பீல்டில் வசிக்கும் இந்திய அம்மையார் ஒருவரை 2 மாதங்களுக்கு முன் சந்தித்த போது அவர் சொன்னார், கலவர / பதற்றமான காலங்களில் அவர் & இந்து மகளிர் மளிகை கடை செல்லும் போது பெரிய பொட்டு வைத்துக்கொண்டு செல்வார்களாம், லண்டனில் நிலைமை அவ்வாறு இல்லை எனில் மகிழவேண்டியதுதான்.
ஆம் சில கடினங்களை குடியேற்ற மக்கள் சந்திக்க வேண்டியது வரும் மாற்ற முடியாது.
மனித உரிமை பற்றி இனி மேலை நாடுகள் பேசாது.

July 26, 2005 7:01 pm  

Post a Comment

<< Home