Tuesday, July 26, 2005

நம்பிக்கை - கவிதைப்போட்டி

இது என் முதல் கவிதை முயற்சி. வெங்கிட்டுவின் கவிதைப்போட்டிக்காக எழுதியது.
கணேஷ், பாசிட்டிவ் ராமா,மதுமிதா,அருண்,பினாத்தல் சுரேஷ் அனைவருடைய inspiration-க்கும் நன்றி.

நம்பிக்கை

வாழ்க்கைச்சுழலின்
ஆதாரச் சக்கரம்.
வாழ்க்கை வளமாக
எளியவொரு சூத்திரம்.
நம்மேல் நாம் வைத்தால்
வளரும் நம் சுயம்.
பிறர்மேல் நாம் வைப்போம்
வளரட்டும் சமுதாயம்.

11 comments:

கயல்விழி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் சுரேஸ்.

Suresh babu said...

நன்றி கயல்விழி.

குறும்பன் said...

எனக்கு கவிதை பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் ஒன்று சொல்வேன், எல்லோர் மீதும் நம்பிக்கை வைக்க கூடாது. ஏனென்றால் நம்பிக்கை வைத்தவர் ஏமாற்றினால் தாங்க முடியாது அந்த வடு ஆற கூடுதல் காலம் தேவைப்படும்.

Suresh babu said...

உங்கள் கருத்துக்கு நன்றி குறும்பன், ஆனால் உங்கள் கருத்திலிருந்து வேறு படுகிறேன். நம்பிக்கை வைத்தவர் ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என்று எல்லாரையும் நம்பாமல் இருப்பதா?... விதிவிலக்குகள் போல் சிலர் இருக்கலாம். ஆனால் அவர்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடலாம் என்பது என் கருத்து.

"Anamikaa" Meyyappan said...

Good One

கயல்விழி said...

//எனக்கு கவிதை பற்றி அவ்வளவாக தெரியாது ஆனால் ஒன்று சொல்வேன், எல்லோர் மீதும் நம்பிக்கை வைக்க கூடாது. ஏனென்றால் நம்பிக்கை வைத்தவர் ஏமாற்றினால் தாங்க முடியாது அந்த வடு ஆற கூடுதல் காலம் தேவைப்படும்.
//

அது தான் முன்னோர்கள்
"நம்ப நட நம்பி நடவாதே" என்று சொல்லியிருக்கிறார்கள். கடைப்பிடித்தால் ஏமாற்றங்கள் குறையும்.

Suresh babu said...

அனாமிகா, கயல்விழி,

இருவருக்கும் நன்றி.

PositiveRAMA said...

//நம்மேல் நாம் வைத்தால்
வளரும் நம் சுயம்.
பிறர்மேல் நாம் வைப்போம்
வளரட்டும் சமுதாயம்.//

அன்பின் சுரேஸ், இந்த நான்கு வரிகளும் நச் என்று இருக்கின்றது. முதல் முயற்சி என்று சொல்வது பொய்போல் உள்ளது.அருமையாக எழுதியுள்ளீர். வாழ்த்துக்கள்! "நம்பிக்கை" யிலும் தங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.

Suresh babu said...

நன்றி ராமா,

நம்பிக்கை குழுவை அருமையாக நடத்தி வருகிறீர்கள். காலையில் அலுவலகத்தில் போய் உட்கார்ந்தவுடன் முதலில் படிப்பது நம்பிக்கை குழுவிலிருந்து வரும் நம்பிக்கையூட்டும் கருத்துக்களைத்தான். நம்பிக்கை குழுவுக்கு என் பங்களிப்பாக என்ன எழுதுவது என்று யோசித்துக்கோண்டு இருக்கிறேன்.

மதுமிதா said...

நல்ல பதிவு சுரேஷ்

Suresh babu said...

நன்றி மதுமிதா