Thursday, August 04, 2005

சானியா மிர்ஸா - இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்

(இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதிய இந்த பதிவு காணாமல் போய் விட்டது :-(( அதனால் திரும்ப...)

சானியா மிர்ஸா... !! கிரிக்கெட் ஜுரத்தில் மற்ற விளையாட்டுக்கள்
அடிபட்டுக்கிடக்கும் ஒரு நாட்டில், தன் திறமையினாலும் வசீகரத்தாலும்
நாட்டின் கவனத்தை தன் பக்கம் திரும்பச்செய்தவர். இது வரை சானியாவின் ஆட்டத்தை நேரிலோ, தொலைகாட்சிகளிலோ பார்த்ததிராத நான், முதன் முதலில் பார்த்தது விம்பிள்டனில் ரஷ்ய வீராங்கனையான ஸ்வெட்லானாவிற்கு எதிரான அவரின் ஆட்டத்தைத்தான். பார்க்கும் போது தான் தெரிந்தது, மீடியாவில் அவர் பற்றிய் வரும் செய்திகள் எதுவும் மிகைப்படுத்தப்பட்டவை இல்லை என்று.


மும்பையில் பிறந்து ஹைதராபாதுக்கு குடியேறிய ஒரு மத்தியத்தர வகுப்புக் குடும்பத்தில் பிறந்த சானியா, முதன் முதலில் டென்னிஸ் மட்டையை கையில் எடுத்தது அவரது ஆறாவது வயதில். பனிரெண்டாவது வயதில் பதினாறு வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அப்போது அதிர்டவசமாக அவருக்கு addidas நிறுவனத்திலிருந்து ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. 2003-ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் இரட்டையர் பட்டத்தை வென்றார். 2005 ல் இந்த வருட சீசன் ஆரம்பத்தில் ஹைதராபாத் ஓபன் ஏடீபி பட்டத்தை வென்றார்.

இந்த சீசன் ஆரம்பிக்கு முன்பு சானியா உலக டென்னிஸ் தரவரிசையில் 194-வது இடத்தில் இருந்தார். அப்போது, இந்த வருட குறிக்கோள் முதல் ஐம்பது இடத்திற்குள் வருவது என்று சொன்னார். சொன்னபடியே சாதித்துக்காட்டிவிட்டார் இப்போது. நேற்று ரஷ்யாவின் பெட்ரோவாவை வென்றதன் மூலம் முதல் ஐம்பது இடத்துக்குள் வருவது உறுதியாகிவிட்டது.


சானியா அளவுக்கதிகமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நம் கிரிக்கெட் வீரர்களைவிடவா அதிகமாக விளம்பரம் தேடிக்கொள்கிறார்? அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு? அது நிறைய இளம் வீராங்கனைகள் உருவாகுவதற்குத்தான் வழி வகுக்கும்.

சானியா கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவருடைய ஆட்டத்தை பார்த்தவர்கள் யாரும் இதை பேராசை என்று நிராகரிக்க மாட்டார்கள்..

வாழ்த்துக்கள் சானியா !!!!

4 Comments:

Blogger தங்ஸ் said...

Yes,she is really gr8 player. When she got 6-4,6-2 against serena williams in aussie open thrid round, i decided she is gonna give us grand slam soon. Getting 4 against Serena is really a good strength. Then, she had some good results two qr finals, two times beating top 10 players..Wow! we got a star..

August 07, 2005 2:24 am  
Blogger Suresh said...

thanks for your comments Thangam...

-Suresh

August 07, 2005 8:28 am  
Blogger kirukan said...

I watched the Dubai WTA Tour match against Svetlana Kuznetsova...

I think thats the best match ever played by any Indian woman in Tennis..

There is no doubt she is gr8..

August 09, 2005 7:08 pm  
Blogger Suresh said...

சரியா சொன்னீங்க கிறுக்கன்.

August 09, 2005 11:36 pm  

Post a Comment

<< Home