Thursday, September 01, 2005

அப்பத்தா கொடுத்த விளக்கு..

பொதுவாகவே எனக்கு தொலைக்காட்சிகளில் மூழ்கிக்கிடப்பது அவ்வளவாக பிடிக்காது. ஆனால் அவ்வப்போது விரும்பிப்பார்க்கும் ஒன்று antique show, பழமைப்பொருள்களை ஏலத்தில் விடுவது பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நாட்டில் பழமைப்பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து அதிசயித்து போய் இருக்கின்றேன். அதே சமயத்தில் நமது நாட்டில் அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது பார்த்து வருத்தமாகவும் இருக்கும்.

கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்த போது பார்த்தபோது எனது அய்யா வீட்டில் இருந்த பழைய அலங்கார மேஜையை வெளியே கொல்லைப்புரத்தில் தூக்கிப்போட்டிருந்தார்கள்.. பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அருமையான வேலைப்பாட்டுள்ள மேஜை அது. அதைப்பார்க்கும்போது சிறுவயதில் அதன் மீது ஏறி விளையாடியது, அதில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் உயரம் பத்தாததால் எம்பிக்குதித்து முகம் பார்த்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அதை ஏன் வெளியே தூக்கிப்போட்டீர்கள் என்று கேட்டதற்கு, அது எதற்கு? பழசாகிவிட்டது அல்லவா? புதிது வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. உடனடியாக மரவேலை செய்பவரை அழைத்து அதை பழுது பார்க்கச்சொல்லி மெருகூட்டச்சொல்லி வீட்டிற்கு உள்ளே வைத்தோம்.

அதே போல் எனது அப்பத்தாவிடம்(அப்பாவின் அம்மா) பழைய கதைகளை கேட்டு அதை குறித்து வைத்துக்கொண்டோம். அவையெல்லாம் கேட்க எவ்வளவு இனிமையானவை தெரியுமா? ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் அவர் எவ்வளவு ஆர்வமாக பதில் சொல்லுகிறார் !! அவரின் பதில்களில் எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன!! ஏதாவது memory transfer technique இருந்தால் அவற்றையெல்லாம் அவரின் நினைவுகளில் இருந்து copy and paste பண்ணிக்கொள்ளலாம் என்று கூட ஆசையாக இருந்தது.

என் மனைவியும் அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது அவரிடம் இருக்கும் ஒரு மிகப்பழமையான பொருள் ஒன்றை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு அப்பத்தா அவர் திருமணத்தின் போது சீராக கொண்டு போன சிறு விளக்கை கொடுத்தார். அதை கொடுக்கும்போது தான் அவர் கண்களில் எத்தனை மகிழ்ச்சி!! அதை பத்திரமாக கொண்டு வந்து பூஜையறையில் வைத்திருக்கிறோம்.

சிலவை பக்கத்தில் இருக்கும்போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை.

10 Comments:

Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

September 01, 2005 10:41 pm  
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அதே போல் எனது அப்பத்தாவிடம்(அப்பாவின் அம்மா) பழைய கதைகளை கேட்டு அதை குறித்து வைத்துக்கொண்டோம். அவையெல்லாம் கேட்க எவ்வளவு இனிமையானவை தெரியுமா? ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் அவர் எவ்வளவு ஆர்வமாக பதில் சொல்லுகிறார் !! அவரின் பதில்களில் எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன!! ஏதாவது memory transfer technique இருந்தால் அவற்றையெல்லாம் அவரின் நினைவுகளில் இருந்து copy and paste பண்ணிக்கொள்ளலாம் என்று கூட ஆசையாக இருந்தது. //

i've thought the thing abt my ammamma.

-Mathy

September 02, 2005 3:03 am  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//பழைய அலங்கார மேஜையை வெளியே கொல்லைப்புரத்தில் தூக்கிப்போட்டிருந்தார்கள்//

same thing happened with a beautiful tray at my appammaa's. Anna and I took it upon us to clean it and to bring it back to it's old beauty. I still remember aththai was so astonshied that we were making such a fuss over an old tray. Only Anna and I knew how many memories it held.

September 02, 2005 3:37 am  
Blogger துளசி கோபால் said...

அப்பப்ப ஆன்டீக் கடையிலே மேயரதுதான் முக்கிய பொழுது போக்கு.

வெள்ளைக்காரன் இந்தியாவிலே இருந்தப்ப வாங்குன ஒரு பெண்டண்ட் இங்கிலாந்து போய் இங்கே நியூஸிக்குக் காலக்கிரமத்துலே வந்து சேர்ந்து எனக்காகக் காத்துக்கிட்டு இருந்துச்சு.

ஒரு பக்கம் காளி சிங்கத்துமேலே. அடுத்த பக்கம்
வேணுகோபால் பசுமேலே ஒய்யாரமா சாஞ்சுக்கிட்டுக் குழல் ஊதறார்.

150 வருசப் பழசாம். புத்தகத்துலே போட்டுருந்துச்சு.

September 02, 2005 4:08 am  
Blogger Suresh said...

மதி, ஷ்ரேயா, துளசி அக்கா..
அனைவருக்கும் நன்றி..

September 02, 2005 8:26 am  
Blogger Ganesh Gopalasubramanian said...

எங்க தாத்தா நான் நல்லா எழுதுவேன்னு சொல்லி எனக்கு ஒரு மேசை செஞ்சு கொடுத்தாரு. இப்பவும் பயன் படுத்திகிட்டுத்தான் இருக்கோம். அந்த மேசை மேல தான் என்னோட கணிணி இருக்கு..... ம்ம்ம் எல்லாம் சோதனை

September 02, 2005 9:26 am  
Blogger Ramya Nageswaran said...

சுரேஷ், நானும் என் வீட்டில் antique போல் தோற்றமளிக்கும் (ஒரு சில தான் உண்மையான antique) பல பொருட்களை வைத்திருக்கிறேன். நான் சென்னை சென்றால், "ரம்யாவுக்கு பரண் மேலே இருக்கிற எல்லா ஓட்டை ஒடசல் பித்தளை பாத்திரமேல்லாம் எடுத்துகொடு.. அவ வீட்டு வரவேற்பறையிலே வைச்சுடுவா" என்று என்னுடைய அப்பா கிண்டல் செய்வார். அவரைப் பொறுத்த வரை நான் காயலான் கடையில் போட வேண்டிய சாமான்களை காசு கொடுத்து வாங்கும் ஒரு மக்கு!!

September 02, 2005 9:28 am  
Anonymous Anonymous said...

எங்க வீட்டுலயும் முன்னாடி இருந்த வெள்ளைக்காரன் வைத்திருந்த ஒரு அலங்காரப் பொருள் இருக்கிறது ! இந்த ஊர் காயலான் கடையில் போட்டால் விலை வருமோ என்று இன்னமும் வைத்திருக்கிறேன்

September 02, 2005 11:59 am  
Blogger G.Ragavan said...

எனக்கும் பழைய பொருட்களில் ஆர்வமுண்டு. என்னுடைய முன்னோர்கள் கலையார்வத்தோடு எதையும் விட்டுச் செல்லவில்லை. என் தாய்வழிப் பாட்டி சொன்ன கதைகள்தான் மூதாதையார் வழி வந்த கலைச் செல்வம்.

சிறுவயதில் அவருடைய கதைகளில் மனம் பறிகொடுத்துக் கேட்டிருக்கிறேன்.

அப்பொழுதே நான் மற்ற சிறுவர் சிறுமியர்களுக்குக் கதை சொல்வேன். ஆகையால் என்னைச் சுற்றி ஒரு கூட்டமிருக்கும். என்னைப் பாம்பாட்டி என்று கிண்டல் செய்வார்கள்.

இப்பொழுது பழம் பொருட்கள் இல்லையென்றாலும் கலைப் பொருட்களை வாங்கும் ஆர்வமுண்டு. கொஞ்ச நாள் முன்பு தஞ்சாவூர் சென்றிருந்த பொழுது கதவில் பதிக்க யாழி முகம் ஒன்று வாங்கி வந்தேன். வெங்கலத்தில் இருந்தது. மிகவும் அழகு.

இரண்டு வாரம் முன்பு ஐதராபாத் சென்றிருந்த பொழுது அங்கே ஷில்பகலா மந்திர் என்ற இடத்தில் அருமையான பொருட்கள் விற்பனைக்கு இருந்தன. மண்பொம்மைகள். மரப்பொருட்கள். நல்ல விற்பனைக்கு. இதே எங்கள் பெங்களூரில் மூன்று மடங்கு விலை சொல்வார்கள்.

பெரிய டெர்ரகோட்டா சிற்பம் வாங்க ஆசையாக இருந்தது. ஆனால் எனக்கு மனம் கவர்ந்த வகையில் எதுவுமில்லை.

சின்னதாக உட்காரும் நாற்காலி (உயரம் குறைவு. சாய்மானம் இருக்காது) சணலால் பின்னப்பட்டது நான்கு வாங்கினேன். இரண்டை அங்கிருக்கும் நண்பனுக்குப் பரிசு கொடுத்து விட்டு இரண்டை பெங்களூருக்குக் கொண்டு வந்து விட்டேன்.

வீட்டில் அழகான கற்சிற்பம் வைக்க ஆசை. கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

September 02, 2005 2:31 pm  
Blogger Suresh said...

கணேஷ், ரம்யா, டுபுக்கு, ராகவன்

அனைவருக்கும் நன்றி.

September 02, 2005 5:35 pm  

Post a Comment

<< Home