Sunday, June 18, 2006

கலக்கிய கானா.....

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட பெரிய அணிகள் அனைத்தும் சொதப்பி வருகின்றன... ஒரு ஆட்டம் கூட சுவாரசியமாக இல்லை...

நேற்று நடந்த கானா மற்றும் செக் குடியரசுக்கு இடையே நடந்த போட்டி அருமையான ஒன்றாக அமைந்து இருந்தது...கானாவின் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதமாக அற்புதமாக இருந்தது. இதற்கு முந்திய போட்டியில் இத்தாலியுடனான போட்டியில் கானா நன்றாக விளையாடியும் தோற்றுப்போனது துரதிஷ்டவசமானது.

கானா அடுத்து USA-வை சந்திக்க உள்ளது. எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போதைக்கு என்னுடைய favourite கானா தான்.

8 comments:

U.P.Tharsan said...

நீங்கள் சொல்வது மிக சரி. ஆனால் 10.06.2006 நடந்த ஆயன்ரினியா&எல்பன்பைன்குஸ்தே போட்டியும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் என்ன ஆயன்ரீனா வென்றது. 2:1

Pot"tea" kadai said...

ப்ரோ,
எப்டி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு!
நிறைய எழுதவும்...

நம்ம பேவரிட் சாக்கரூஸ் தான்...லொல்:-))ஆனா கெலிக்க போறதென்னவோ ஆர்ஜென்டினா தான்னும் மனசு சொல்லுது.

Dharumi said...

அர்ஜெண்டினா முதல் ஆட்டம் செம ஜோர் அப்டின்னு எல்லாரும் சொல்றாங்க...நான் பார்க்கலை..

நான பார்த்தவைகள் பற்றி: http://sixth-finger.blogspot.com/

Suresh babu said...

tharsan, சத்யா, தருமி,

அனைவருக்கும் நன்றி.

குறும்பன் said...

சுரேஷ் 2 போட்டியை வைத்து கானா மேல் மோகம் கொண்டு "கானா" பாடுறீங்களே? கானா நன்றாக விளையாடினார்கள் ஆனால் அர்ஜென்டினா என்று ஒரு நாடு உள்ளதை மறந்து விட்டீர்களே??
பிரேசில் - ஆஸ்திரேலியா போட்டியில் பிரேசில் வென்றாலும் பிரேசிலின் ஆட்டம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பது என் கருத்து.
எனது favourite அர்ஜென்டினா.

Suresh babu said...

குறும்பன்.... இன்று அமெரிக்காவுக்கு எதிரான கானாவின் ஆட்டத்தை பார்த்ததிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அடுத்து பிரேசிலுக்கு எதிரான அவர்களின் ஆட்டத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

மஞ்சூர் ராசா said...

கானா செமிஃபைனல் வரை வந்தாலே மிகவும் சந்தோசம்.

நேற்று அமெரிக்காவுக்கு தண்ணிக் காட்டியது.

அமெரிக்காவை எதிலாவது ஜெயிக்கவேண்டும் என்றால் அது விளையாட்டில் மட்டும் தான் போல தெரிகிறது.

குறும்பன் said...

சுரேஷ் கால்பந்தில் அமெரிக்காவை எந்த கணக்கிலும் எடுத்துக்ககூடாது.

நானும் பிரேசிலுக்கு எதிரான கானா ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மறக்காம விலாவாரியா அதை பற்றி பதிவு போடவும்.