Sunday, November 05, 2006

ஜோதிகாவா? சவுந்தர்யாவா?

இன்று utube-ல் மேய்ந்துகொண்டு இருக்கும்போது இது கிடைத்தது. எனக்கென்னவோ சவுந்தர்யா இதில் சிறப்பாக பண்ணியிருக்கிறார் என்று தோன்றுகிறது.




miss-பண்ணிய ஒரே விஷயம் 'என்ன கொடுமை சரவணன்' :-)

இனி தமிழில்,

10 comments:

துளசி கோபால் said...

எனக்கென்னவோ 'ஜோதிகா'தான் சிறப்பாத் தெரியறார்.

முந்தாநாள்,'மணிச்சித்திரத்தாழ்' பார்த்தேன். எத்தனையாவது தடவைன்னு கணக்கு வச்சுக்கலை.:-))

Suresh babu said...

வாங்க துளசி அக்கா.. எப்படி இருக்கீங்க... பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு...

மணிச்சித்திரத்தாழ் பார்த்திருக்கிறேன்.... ஷோபனா இன்னும் சிறப்பாக நடித்டிருப்பார்....

ஷைலஜா said...

எனக்கும் சௌந்தர்யாதான் பிடிச்சிது ஆப்தமித்ராவை பெங்களூர்ல ஆறுதடவை பார்த்தேன்!! ஆனாலும் ஷோபனா நல்ல நாட்டியநடிகை என்பதால் மணி சித்ரதாழில அசதிட்டாங்க..ஜோதிகாக்கு பார்வை ஒன்றே போதுமே? ஒவ்வொரு பூவுமே அழகுதான் இல்லயா?
ஷைலஜா

(சுரேஷ் உங்க வலைக்கு இப்பதான் விசிட் செய்றேன் பிகாஸ் , நான் சமீபமாத்தான் வலைல விழுந்திருக்கேன்!!)

வெளிகண்ட நாதர் said...

என்ன சுரேஷ் நமக்குப் போட்டி பதிவா, இந்த பதிவை பார்த்தீங்களா??

ramachandranusha said...

நான் பார்த்தது மலையாளமும் தமிழும். எனக்கு ஷோபனாவின் நடிப்புதான் ரொம்ப பிடித்தது.

ஷைலஜா இதுதாங்க கவிதை :-)

//ஒவ்வொரு பூவுமே அழகுதான் இல்லயா?//

Suresh babu said...

வாங்க ஷைலஜா!

>>ஒவ்வொரு பூவுமே அழகுதான் இல்லயா?

ரொம்ப சரியா சொன்னீங்க...

வெளிகண்ட நாதர் !!

உங்க பதிவை இப்பத்தான் பார்த்தேன். எப்படித்தான் இப்படி விவரித்து பக்கம் பக்கமாக எழுத வருகிறதோ !! ஆச்சரியமாக இருக்கிறது. :-)

வாங்க உஷா!!

ஆமாம்...ஷோபனா அழகாக நடனமாடியிருப்பார்... திரும்ப ஒருமுறை பார்க்க வேண்டும். ம்

மருதநாயகம் said...

ரா...ரா பாடலை ரீமிக்ஸ் செய்து இருக்கிறேன். இசையில் அல்ல பாடல் வரிகளில்

ராவா நான் அடிச்சது ராவா
பியரா நான் கலந்தது பியரா
ஆம்லெட்டே சைட் டிஷ்ஷா
வேர்க்கடலை கொறிக்கவா
போதையே ஏறுது ஜோரா

சரவ். said...

The super hit லகலகலகலகலகலக also missing!! :)

ரொம்ப நாளாச்சு!! நல்லா இருக்கீங்களா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் ஷோபனா பக்கம்தான்.. அதற்குப் பின்தான் ஜோதிகாவும், சவுந்தர்யாவும்.. மலையாளத்தில் மிக மிக யதார்த்தம். கன்னடத்தில் 100 சதவிகிதம் மசாலா.. தமிழில் 200 சதவிகிதம் கரம் மசாலா..

G.Ragavan said...

என்னோக்க வாக்கு ஜோதிகாவுக்கு. நடனம் தெரிஞ்சவங்கங்குற வகையில நல்லா ஆடீயிருப்பாங்க சௌந்தர்யா. ஆனா நடிப்புல ஏதோ ஒரு குறை. ஜோதிகா நடிப்பு பிரமாதம். நடனம் தெரியாத பெண் நடனமாடுற மாதிரி நம்பி ஆடனும்....அந்த வகையில ஜோதிகா சரியா தப்பாப் பண்ணீருந்தாங்கன்னு தோணுது. ஆனா ஷோபனா அந்த வேலைய ரொம்ப லேசா செஞ்சிருப்பாங்க.