Sunday, May 08, 2005

பாலகுமாரன்.

என்னை பாதித்த எழுத்தாளர்களில், எழுத்துக்களில் என்னை மிகவும் பாதித்தவர் திரு பாலகுமாரன் அவர்கள்.

பாலகுமாரன் அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன்.

நான் இங்கிலாந்திற்க்கு, வந்த பிறகு நான் மிகவும் miss பண்ணுவது பாலகுமாரன் அவர்களின் நாவல்களைத்தான்.

இங்கு வலைப்பதியும், படிப்பவர்களில் பாலகுமாரன் விசிறிகள் யாரும் இருக்கிறீர்களா?

11 comments:

Sri Rangan said...

ஏனில்லை?அவருடைய நாவல்களில் அதிமுக்கியமானதும்,சிறந்ததும் 'மேக்குரிப் பூக்கள்'மட்டுமே! சீதாவும், பாலுவும் இன்னும் கண்முன்னே.

துளசி கோபால் said...

வணக்கம் சுரேஷ்,

வாங்க வாங்க. வந்து இந்த வலைப்பதிவு 'ஜோதி (ஜாதி!)'யிலே
கலந்துடுங்க!!!!

என்கிட்டே 'இரும்புக் குதிரைகள்' இருக்கு!

அப்புறம் ஒரு கதை பேர் மறந்து போச்சு. கடைசியிலே ஒருத்தர்
கபால மோட்சம் அடஞ்சுடுவார்'
அதை யாரொ சுட்டுட்டாங்க!

என்றும் அன்புடன்,
துளசி.

பத்மா அர்விந்த் said...

பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் என்று பலவும் படித்துள்்ளேன். அதிகம் பாதித்தது பச்சை வயல் மனது.சில சமயம் ayn randn சிந்தனைகளும் சில சமயம் somerset maugm நினைவுபடுத்தும் எழுத்து.சமீபத்தில் சிநேகிதியில் ஆணுக்கு எப்படி பட்ட பெண்களை பிடிக்கும் என்று எழுத ஆரம்பித்து அனுராதா ரமனின் விவாதத்தில் நிறுத்திவிட்டார். எனக்கு பொதுவாகவே எழுத்துக்களின் மீது தான் பிடித்தம், எழுத்தாளரை அல்ல. எனவே கோவிலை பற்றியும் மூடநம்பிக்கைகள் பற்றியும் பாலகுமாரன் எழுதும் போது பிம்பம் எதுவும் உடையவில்லை!

dondu(#4800161) said...

பாலகுமாரன் விசிறியா நீங்கள்? பார்க்க
http://www.balakumaran.net/index.php:

அன்புடன்,
டோண்டு ராகவன்

Suresh babu said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

காதல், சமுதாயம் என்று எழுதிக்கொண்டு இருந்த பாலகுமாரன் அவர்கள் பின்பு சரித்திரம், ஆன்மீகம் என்று எழுத ஆரம்பித்தவுடன் நிரய பேருக்கு பிடிக்கவில்லை. பாலகுமாரன் திரும்பவும் சமுதாய கதை-களை எழுத ஆரம்பித்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

அன்பு said...

சுரேஸ்....
நானும் அவர் சமூகக்கதைகள் எழுதியவரை அனைத்தையும் படித்தேன். தாடிவைத்தபின்னர் சிலகாலம், அதன்பின்னர் தொடர்வில்லை... ஒருவேளை இங்கு சிங்கையில் $3 வெள்ளிக்குமேல் கொடுக்கவேண்டியிருந்ததும், காரணமாக இருக்கலாம்.

சிங். செயகுமார். said...

பால குமாரன்
எழுத்து சித்தரின் பெரும்பாலான நாவல்கள் வாசித்தும் சில நாவல்கள் இன்றும் என்னை இம்சை செய்கின்றன."என் அன்பு காதலா " ஒரே நாவலில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழ்ந்து காட்டியுள்ளார். கல்லூரி பூக்கள் தொடர் கதையாய் வந்த போது இடையே பெரிய பூதாகரமான பிரச்சனை. உதவி இயக்குனரை பற்றிய கதை. அவர்கள் வழ்வினை படம் பிடித்து கட்டியதால் அன்று பாலா விற்கு வீட்டெதிரே முற்றுகை. பின்னாளில் புத்தகமாக வந்த போது கதை முழுவதும் மாற்றபட்டது.

காலத்தால் அழியாது

முகமூடி said...

பாலகுமாரன் பற்றி தேடிய போது கண்ணில் சிக்கியது. நானும் ஒரு காலத்தில் அவர் எழுத்தை விரும்பி படித்ததுண்டு. பின்பு ஏனோ...

// உதவி இயக்குனரை பற்றிய கதை. அவர்கள் வழ்வினை படம் பிடித்து கட்டியதால் அன்று பாலா விற்கு வீட்டெதிரே முற்றுகை //

அது உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை படம் பிடித்ததால் அல்ல... (நினைவிலிருந்து) "...நிதர்சனம் புரியும் போது கிராமத்தில் சமைஞ்ச பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு...." என்பது போன்று எழுதியிருந்தார். "கிராமத்தில் சமைஞ்ச" என்ற பதத்தை படிக்கையில், எனக்கும் கோபம் வந்தது. அவர்களின் போராட்டம் எனக்கும் சரியாகவே பட்டது...

மூர்த்தி said...

நானும் அவரின் தீவிர ரசிகன். சொல்லிக்கொள்ள மிகவும் பெருமையாக இருக்கிறது. எதேச்சையாகப் படிக்கப்போய் என்னையே முழுமையாக ஆட்கொண்டவர் பாலா.

குமரன் (Kumaran) said...

சுரேஷ் மற்றும் நண்பர்களே. நானும் பாலகுமாரனின் தீவிர வாசகன்.

KARISAKKATTAN said...

சுரேஷ்!

இப்படி யாராவது கேட்க மாட்டார்களா?
பாலகுமாரன் வாசகர்கள் இருக்கிறார்களா?
என எல்லா தேடு இயந்திரங்களிலும் தேடி ஏமாந்திருக்கிறேன்.

உங்கள் மூலமாகவும், டோண்டு மாமா மூலமாகவும் பாலகுமாரன் வாசகர்கள் இருப்பதையறிந்து மகிழ்ச்சி!!!!!