Sunday, May 08, 2005

லண்டனில் சரவண பவன்.

ஆஹா !!

எவ்வளவு நாள் ஆதங்கம்.

லண்டன் வெம்பிளியில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று சரவண பவனுக்கு சென்றிருந்தேன். அதே சுவை. கொஞ்சமும் மாறாமல் இருந்தது.
ரொம்ப நாள் கழித்து ரோம்பவும் அனுபவித்து சாப்பிட்டோம்.

நிஜமாகவே, காய்ந்து போய் இருக்கிறோம். எந்த ரெஸ்டாரெண்ட் போனாலும் அது பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானிகள் நடத்தும் இந்திய ரெஸ்டாரெண்ட்-ஆகவே இருக்கிறது.

ஆரம்பித்தவருக்கு நன்றிகள். என்னைப்பொருத்தவரை இது ஒரு பிஸினெஸ் இல்லை. சேவை.

7 Comments:

Blogger துளசி கோபால் said...

ஹூம்...ம்ம்ம்ம்

என்ன, ஏதோ புகையற வாசனை வருதா?

ச்சீச்சீ.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஒரு ச்சின்ன வயித்தெரிச்சல்தான்!!!!

May 08, 2005 10:13 pm  
Blogger jeevagv said...

This comment has been removed by a blog administrator.

May 09, 2005 12:05 am  
Blogger jeevagv said...

ஒரு பிடி பிடியுங்கள் சுரேஷ்!

May 09, 2005 12:06 am  
Blogger Narain Rajagopalan said...

KFCயும், McDonalds-ம் பங்களுரிலும், டெல்லியிலும் இருக்கின்றன. போகும் போது சாப்பிட்டு இருக்கிறேன். ம்ஹும். இன்னமும் எத்தனை நாள் காத்திருப்பது சென்னையில் இவையிரண்டுக்காகவும். இக்கரைக்கு அக்கரை .....? ;-)

May 09, 2005 5:56 am  
Blogger அன்பு said...

சுரேஸ்,

இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து (லண்டன் ச.ப பழகியபிறகு) அதே பழையசுவை இருக்கிறதா என்று சொல்லுங்கள். ஏனென்றால் இங்கு சிங்கப்பூரில் அதே சுவையில்லை - ஆனா பரவாயில்லை.

நரேன்... KFC/McD இன்னும் சென்னையில் வரவில்லையா ஏன்?

May 09, 2005 10:46 am  
Blogger Muthu said...

சுரேஷ்,
லண்டனில் தமிழ் ஓட்டல் கட்டாயம் இருந்திருக்குமே - ஈழத்தமிழர் நடத்தும் ஓட்டல்கள்.

May 09, 2005 9:55 pm  
Blogger Suresh said...

முத்து,

நிறைய இருக்கின்றன. ஆனால் அங்கு கிடைக்கும் உணவுகள் வேறு. சுவையான இடியாப்பம்,கொத்து பரோட்டா மற்றும் பிட்டு அனைத்தும் கிடைக்கும்.

May 10, 2005 8:31 pm  

Post a Comment

<< Home