Monday, May 09, 2005

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் படிக்க வேண்டும்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் படிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.

யாராவது இந்தியா சென்று திரும்புவர்களிடம், எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வரச்சொல்ல வேண்டும் அல்லது நண்பர்களை வாங்கி அனுப்ப சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

சும்மா வலைமேய்ந்து கொண்டு இருந்த போது தான் 'ப்ராஜெக்ட் மதுரை' கண்ணில் பட்டது.
ஆஹா எவ்வளவு அருமையான காரியம் பண்ணியிருக்கிறார்கள். கோடி கொட்டி கொடுக்கலாம். தொல்காப்பியத்திலிருந்து, ஜெயகாந்தன் சிறுகதைகள் வரைக்கும் அனைத்தையும் pdf format -லும் வைத்திருக்கிறார்கள்.

அவசர அவசரமாக முதலில் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டையும் இறக்கி வைத்துள்ளேன்.

இன்னொரு பத்து நாளைக்கு வெட்டியாக வலைமேய வேண்டிய அவசியம் இல்லை.

5 Comments:

Blogger Muthu said...

சுரேஷ்,
மதுரைத்திட்டத்தை ஆரம்பகாலத்தில் இருந்தே தட்டச்சும் பலர் வலைப்பதிவாளராக இருக்கிறார்கள்.

May 10, 2005 12:02 am  
Blogger Unknown said...

பொன்னியின் செல்வன் படிக்கப் போறிங்களா?... படிச்சு முடிச்ச உடனே 'சோழப் பரம்பரை' நல்லா மனப்பாடம் ஆகிவிடும் உங்களுக்கு. பின்ன? திரும்ப, திரும்ப அதுதான் கதைமுழுக்க!. சிவகாமியின் சபதம் படிக்கலாம்!. நீங்கள் பெண்ணாக இருந்தால், 'சிவகாமியாக' உங்களை நினைத்துகொண்டு, ஆணாக இருந்தால் 'மாமல்லனை' மனதில் கொண்டும்!.

May 10, 2005 1:03 am  
Blogger Vijayakumar said...

சுரேஷ்,

புதுமைபித்தன், கல்கியில் எல்லா படைப்புகளும் + இதர தமிழ் நூல்களை படிக்க நீங்கள் போக வேண்டிய இடம் http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html

May 10, 2005 2:30 am  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

Suresh,

My order of reading , even if it is 25th time, is:

1. Parthiban kanavu
2. Sivagamiyin sabatham
3. Ponniyin Selvan

I feel, the writing prowess of Kalki gradually increases in THIS order.

"penathal" Suresh
ps: ithukku ethavathu pannungappa- too many sureshes!

May 10, 2005 4:57 am  
Blogger Suresh said...

அனைவருக்கும் நன்றி.

இவ்வளவு நாள் கீபோர்ட்,மவுஸ், நெட் இருந்தும் குருடனாக இருந்திருக்கிறேன்.

May 10, 2005 8:52 am  

Post a Comment

<< Home