Tuesday, August 09, 2005

நயாகரா சிண்ட்ரோம் - ஒரு சீரியஸ் பதிவு - Part 1

பெங்களூரில் பணி புரிந்து கொண்டு இருந்த போது பல விதமான சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்களில் கலந்து கொள்வது உண்டு. எந்த பயிற்சி முகாமுக்கு போனாலும் தெரிந்த அதே விஷயங்கள் தான் வெவ்வேறு பரிமாணங்களில் சொல்லப்பட்டன.ஆனால் வாகனங்களை service -க்கு விடுவது போல், நம் மனதையும் அவ்வப்போது புத்துணர்ச்சிப்படுத்திக்கொள்ள இது போன்ற பயிற்சி முகாம்கள் உதவின.

இப்போது சிந்தித்துப்பார்த்தால் நமது வாழ்க்கையில் பெரும்பாலான நேரம், நாம் வாழ்க்கையின் ஓட்டத்திலேயே போய்க்கொண்டு இருக்கிறோம். நிர்வாகவியலில் இதை 'நயாகரா சிண்ட்ரோம்' என்று சொல்வார்கள். ஓடத்தில் அமர்ந்து கொண்டு ஆற்றின் போக்கிலேயே போய்க்கொண்டு இருக்கும் ஒருவன் சிந்தித்தான். 'ஆஹா... எவ்வளவு அருமையாக இருக்கிறது இந்த பயணம், நாம் துடுப்பு போடவே வேண்டியதில்லை' என்று....அப்படியே பயணத்தை ரசித்துக்கொண்டே போய்க்கொண்டு இருந்தான். சற்று நேரம் கழித்து பார்த்தால் தூரத்தில் இருந்து அருவிச்சத்தம் கேட்டது. அப்புறம் தான் அவன் உணர்ந்தான் அவன் ஒரு அருவியின் விளிம்பில் இருப்பதை. நிலைமையை உணர்ந்து ஓடத்தை திருப்புவதற்குள் காலம் கடந்து விட்டது.

இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் அந்த உணர்தல் சாத்தியப்படுவதில்லை. எதுவுமே நிலையில்லாத இந்த வாழ்க்கைச்சூழ்நிலையில் ஒருவிதமான feel of insecurity -யில் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து பார்க்கவோ, நிகழ்காலத்தில் நடப்பதை ஆராய்ந்து பார்க்கவே பயமாக உள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நமக்கு தெளிவை ஏற்படுத்த புற உதவி தேவைப்படுகின்றது. புற உதவி கீழ்க்கண்டவற்றின் மூலமாக சாத்தியப்படுகிறது.

1) நல்ல வாழ்க்கைத்துணை
2) நல்ல மனம் விட்டு பேசக்கூடிய நண்பர்கள் அல்லது உறவினர்கள்.
3) குருவாக அல்லது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒருவர்.
4) நல்ல வாசிப்புகள்.

பொதுவாகவே நமக்கு நமது மட்டத்தில் இருக்கும் ஒருவரிம் இருந்து வரும் அறிவுரைகள் பிடிப்பதில்லை. இதற்குக்காரணம் முதலில் EGO-(Edging God Out). இரண்டாவது நுனிப்புல் மட்டத்தில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருப்பது தான். அறிவுரைகள் வெறும் அறிவுரைகளாக இல்லாமல் தெளிவுரைகளாகவும், பகிர்ந்துரைகளாகவும் இருந்தால் அவைகள் நம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நமக்கு தேவைப்படும் புற உதவிகளில் ஒன்றான வாசிப்புகளுக்கு ஏதாக இனி அவ்வப்போது, ஒரு வாசிப்பாளனின் கண்ணோட்டத்தோடு ஒரு தேடலின் பயணத்தைப்பற்றி தொடர்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். எப்படி ஆரம்பிப்பது என்று தான் ஒரே குழப்பமாக இருந்தது. இதோ உதவிக்கு அறிஞர் பிளேட்டோ 'ஒரு வேலையில் முக்கியமான பகுதி என்பது அதன் ஆரம்பம் தான்'.

(தொடரும்)

15 Comments:

Blogger டண்டணக்கா said...

நன்றாக ஆரம்பித்து உள்ளீர்கள். கடினமான சப்ஜெக்ட், சுவாரஸ்யமாக எழுத வாழ்த்துக்கள்.
-டண்டணக்கா

August 10, 2005 3:28 am  
Blogger துளசி கோபால் said...

//நமக்கு தேவைப்படும் புற உதவிகளில் ஒன்றான வாசிப்புகளுக்கு ஏதாக ...//

இதுக்குத்தானே மற்ற வலை பதிவுங்கெல்லாம்( ஜாஸ்தி ஒண்ணும் இல்லே ச்சும்மா அறுநூத்துச் சொச்சம்தான்) இருக்கு.
படிச்சுட்டாப் போததா?:=))))

ச்சும்மா சுரேஷ், நல்ல பதிவு.

என்றும் அன்புடன்,
துளசி.

August 10, 2005 6:19 am  
Blogger Suresh said...

டண்டனக்கா,

வாழ்த்துக்கு நன்றி. என்னால் இயன்றவரை முயற்சிக்கிறேன்.


துளசி அக்கா,

வருகைக்கும், பின்னூட்டத்திற்கு நன்றி.

August 10, 2005 10:42 am  
Blogger இரா. செல்வராசு (R.Selvaraj) said...

சுரேஷ், நல்ல கரு. நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.

August 10, 2005 5:19 pm  
Blogger ரங்கா - Ranga said...

The phrase "Niagara syndrome" reminds me of this quote: 'Remember, a dead fish can float downstream, but it takes a live one to swim upstream.'
W. C. Fields

August 10, 2005 9:41 pm  
Blogger Suresh said...

சத்யா, செல்வராஜ்,

வாழ்த்துக்கு நன்றி.


ரங்கா,

W. C. Fields-ன் quote-க்கு நன்றி. உங்கள் கவிதைகளை படித்தேன். நன்றாக இருந்தன.

August 10, 2005 10:18 pm  
Blogger தங்ஸ் said...

Romba Nalla irukku..Keep going!!

August 13, 2005 12:25 am  
Blogger Suresh said...

thanks thangam..

August 15, 2005 11:53 am  
Blogger NambikkaiRAMA said...

சுரேஷ் அருமையான பதிவு. நம் குழுமத்திலும் ஒரு காப்பி அனுப்பிடலாமே?

August 16, 2005 4:24 am  
Blogger Suresh said...

ராமா,

பின்னூட்டத்திற்கு நன்றி. கண்டிப்பாக நமது நம்பிக்கை குழுமத்திற்கும் ஒரு காப்பி அனுப்பிவிடுகிறேன்.

August 21, 2005 8:43 pm  
Blogger நிலா said...

//இரண்டாவது நுனிப்புல் மட்டத்தில் எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருப்பது தான். //

சரியாகச் சொன்னீர்கள். தெரிகிறதோ தெரியவில்லையோ நமக்கென்று ஒரு ஆழ்ந்த ஒபினியன் வைத்துக்கொண்டு அதை வலியுறுத்தும் கில்லாடிகள் நாம்.

சில சமயம் வாழ்க்கையின் ஒட்டத்தில் போவதே தேவலை என்றிருக்கிறது - take as it comes என்றுதானே பல ஆன்மீக குருக்களும் சொல்கிறார்கள். எதிர்த்து நீந்தி நீந்திக் களைத்தே செத்துப் போவதும் நடக்கத்தான் செய்கிறது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை வேண்டுமென்று நினைக்கிறேன்.

சில சமயம் 'எண்ணைஅயைத் தேய்ச்சுக்கிட்டு மண்ணில புரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்' என்பது போன்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை

January 10, 2006 12:43 pm  
Blogger தருமி said...

wish you a successful intellectual journey.....

January 10, 2006 2:30 pm  
Blogger மோகன் said...

Good thought...waiting for followup's

January 10, 2006 3:57 pm  
Blogger ramachandranusha(உஷா) said...

நுனிப்புல் என்ற வார்த்தைக்கு காப்பி ரைட் உரிமம் என்னுடையது, ஆக அச்சொல்லை பாவிக்க நினைப்பவர்கள் என்னிடம் முன் அனுமதிப் பெற வேண்டும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் :-)))))

January 10, 2006 4:29 pm  
Blogger G.Ragavan said...

சுரேஷ், கொஞ்சம் சிரமமான விஷயம். சுவாரசியமான தொடக்கம். இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல எனது வாழ்த்துகள்.

January 10, 2006 5:26 pm  

Post a Comment

<< Home