Tuesday, July 19, 2005

தமிழ் வலைப்பதிவுகள் மட்டும் இருந்திருக்காவிட்டால்

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால் நான் என் நேரத்தை எப்படி செலவழித்துக்கொண்டு இருந்திருப்பேன் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.

முதலில், எனக்கு கிடைக்கும் நேரத்தைப்பற்றி,
1) அலுவலகத்தில் உருப்படியாக ஒரு 4 மணி நேரம் வேலை செய்தாலே ஆஹா!! ஒஹோ !! என்கிறார்கள். (வலைமேய 4 மணி நேரம் அலுவலகத்தில்)
2) 5 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் உள்ளே வைத்து பூட்டி விடுவார்கள். எனவே 5 மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பியே ஆக வேண்டும்.
3) வீட்டிலிருந்து அலுவலகம் 5 நிமிட நடையில்.(வீட்டுக்கு வந்தவுடன் மேலும் 4 மணி நேரம் கிடைக்கிறது)

மொத்தம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வலை மேய கிடைக்கிறது. வாரக்கடைசியில் இதற்கு இன்னும் அதிகமாகவே நேரம் கிடைக்கும்.

கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால், இந்த 8 மணி நேரத்தில் பாதிக்கு மேல் தமிழ்மணத்தில் தான் செலவழிக்கிறேன் என்று தெரிகிறது.

முதலில் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் ஏதாவது புதிய பதிவு இருக்கிறதா என்று ஒரு பார்வை. அதில் சுவாரசியமாக எதுவும் இல்லாவிட்டால், சமீபத்தில் மறுமொழியப்பட்டவை, அதையும் படித்து முடித்தவுடன் வெறுமையாக இருக்கும்.
பிறகு, விகடன், குமுதம், தமிழோவியம், பீபீசீ, கூகிள் செய்திகள்,கூகில் மின்னஞ்சல், யாஹூ மின்னஞ்சல், மீண்டும் தமிழ்மணம், கொஞ்சம் அலுவலக வேலை, மதிய உணவு இடைவேளை, திரும்பியவுடன் மின்னஞ்சல்கள், தமிழ்மணம், புதிய பதிவுகள் எதுவும் இருந்தால் அதை முடித்துவிட்டு வேறு எதுவும் இல்லாவிட்டால் அலுவலக வேலை.

இப்படியே பொழுது போய் விடுகிறது. சிலசமயத்தில் நேரத்தை வீணடிக்கின்றேனோ என்று ஒரு கவலை ஏற்படுகிறது. இந்த நேரத்தை வேறு எதற்காகவாவது உபயோகமாக செலவழித்திருக்கலாமோ என்று சிந்தனை.

இந்த பதிவை சீக்கிரம் முடித்து விட்டு, mail check பண்ண வேண்டும், தமிழ் மணத்தில் வேறு ஏதாவது பதிவுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது.

தமிழ் வலைப்பதிவுகள் மட்டும் இருந்திருக்காவிட்டால்!!!!!!

11 Comments:

Blogger contivity said...

அன்பிள்ள சுரேஷ்,

எவ்வளவு உண்மை....

//இந்த பதிவை சீக்கிரம் முடித்து விட்டு, mail check பண்ண வேண்டும், தமிழ் மணத்தில் வேறு ஏதாவது பதிவுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது.//

We are in the same boat :)))

July 19, 2005 9:57 pm  
Anonymous Anonymous said...

போட்டிக்கு ரொம்பப் பேரு இருப்பீங்க போல இருக்கு

:-))

July 19, 2005 11:28 pm  
Blogger Chandravathanaa said...

இந்த பதிவை சீக்கிரம் முடித்து விட்டு, mail check பண்ண வேண்டும், தமிழ் மணத்தில் வேறு ஏதாவது பதிவுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

July 19, 2005 11:31 pm  
Blogger துளசி கோபால் said...

இங்கெமட்டும் என்ன வாழுது? அதே கதைதான்!

இது ஒரு 'அடிக் ஷன்' ஆகிப் போச்சேப்பா!

என்ன செய்யலாம்?

எவ்வளவோ வேலைங்க போட்டது போட்டபடி அப்படியே இருக்கே!

என்றும் அன்புடன்,
துளசி.

July 20, 2005 2:01 am  
Blogger குமரேஸ் said...

நீங்கள் சொல்வதுதான் இங்கும்,

அதுசரி, இந்தவாரம் ஆளாளுக்கு உண்மை சொல்லும் வாரமா என்ன?

July 20, 2005 4:44 am  
Blogger Unknown said...

ஐரோப்பாவில ஆனாலும் அநியாயம்பா. அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போறீங்க. எக்கச்சக்கமா விடுமுறை வேற. இங்க அமெரிக்காவில பெண்டு நிமிருது வேலை ராத்திரி 7 மணி வரைக்கும். எனக்கு ஒருநாளைக்கு அரை மணி கெடச்சாலே பெரிய விஷயம். இதுல பொண்டாட்டி வேற திட்டறா.

July 20, 2005 4:47 am  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

பேர் ராசி போல இருக்கு.. இங்கேயும் அதே கதைதான்.

வெளியே சொல்லாதீங்க - திருஷ்டி பட்டுடும்!

July 20, 2005 5:23 am  
Blogger அன்பு said...

இதுக்காகவது என்னோட பேரை 'சுரேஷ்'னு மாத்திக்கலாம்னு இருக்கேன்....

வயிறு எரியுது...

முதலில் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் ஏதாவது புதிய பதிவு இருக்கிறதா என்று ஒரு பார்வை. அதில் சுவாரசியமாக எதுவும் இல்லாவிட்டால், சமீபத்தில் மறுமொழியப்பட்டவை, அதையும் படித்து முடித்தவுடன் வெறுமையாக இருக்கும்.
என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க... அந்த மேலே உள்ள தமிழ்மணம் icon மேலே கிளிக் பண்ணுவீங்களா இல்லியா...
(அது ஒரு undocumented trick - வேணும்னே அப்படி மாத்திட்டாரு காசி) அங்க போனா இன்னும் என்சாய் பண்ணுவீங்க... அது ஒரு காலம், கார்காலம்.
இங்கே... அல்லது இங்கே...

July 20, 2005 5:57 am  
Blogger வானம்பாடி said...

//ஐரோப்பாவில ஆனாலும் அநியாயம்பா. அஞ்சு மணிக்கெல்லாம் வீட்டுக்கு போறீங்க. எக்கச்சக்கமா விடுமுறை வேற. இங்க அமெரிக்காவில பெண்டு நிமிருது வேலை ராத்திரி 7 மணி வரைக்கும்.//
ஹ்ம்ம். இங்கே இந்தியாவிலே இரவு 9.00, 10.00 மணி வரைக்கும் வேலை பெண்டு நிமிருது.

July 20, 2005 7:25 am  
Blogger Suresh said...

contivity, பரணீ,சந்திரவதனா,மூர்த்தி,துளசி அக்கா(எல்லோரும் உங்களை அக்கான்னு தானே கூப்பிடுறாங்க),குமரேஸ், ரமணி, சுரேஷ்,அன்பு,முகமூடி,சுதர்சன் எல்லோருக்கும் நன்றி.

அயல் நாட்டிலிருக்கும் பெரும்பாலோருக்கும் இதே மாதிரியான அனுபவம் தான் இல்லையா?

சிங்கப்பூர், மலேசியாவில் கொஞசம் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்று கேள்விப்பட்டேன்.

வெவ்வேறு நாடுகளில் உள்ள வேலை கலாச்சாரத்தைப்பற்றி தனியாக ஒரு பதிவு எழுத ஆசை.

அன்புடன்,

சுரேஷ்.

July 20, 2005 8:09 am  
Blogger Adaengappa !! said...

I identify myself with your post !!
Adeengappa !!

July 23, 2005 1:37 am  

Post a Comment

<< Home