Friday, July 22, 2005

பேஜ் 3

இதைப்பற்றி யாரும் எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நேற்றுத்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கக்கிடைத்தது. அருமையான படம். இந்தப்படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒருவரியில் கதை, முன்னணி தினசரியின் மூன்றாம் பக்கத்தில் வரும் பிரபலங்களைப்பற்றிய செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு நிருபர், பார்க்க நேரும் பிரபலங்களின் நிஜ ரூப வக்கிர முகங்களைப்பற்றியது.

இயக்குனருக்கு அருமையாக கதை சொல்லதெரிந்திருக்கிறது. மேல் தர வகுப்பில் உள்ள அனைத்து அவலங்களையும் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கொங்கனா சென்னின் இதற்கு முந்திய படமான மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்திருப்பவர்களுக்கு அவருடைய நடிப்பைப்பற்றி தெரிந்து இருக்கும். மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பு.

கலாச்சாரம் என்ற மாயை எல்லாம் மத்திய தர வகுப்பு மக்களுக்கு மட்டும் தான் என்று இந்தப்படம் பார்த்த பிறகு உறுதிப்படுகிறது.

ப்ளாக், பேஜ்3... இது போன்ற இந்திப்படங்கள் வரவேற்கத்தக்க நல்ல முயற்சிகள்.

3 Comments:

Anonymous Anonymous said...

Yes, it was a very good movie. the true color of the so called VIPs was unravelled...

Good screenplay and acting

July 22, 2005 3:24 pm  
Blogger Suresh said...

வளவன்,

உங்கள் தகவலுக்கு நன்றி,

சாந்தினி பார் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

-சுரேஷ்

July 22, 2005 6:14 pm  
Blogger Suresh said...

தான்யா,

நாராயணன் எவ்வளவு அருமையாக, விரிவாக விமர்சனம் எழுதி இருக்கிறார். படத்தையே பார்த்தது போல் ஒரு உணர்வு இருந்தது.

சுட்டிக்கு நன்றி.

-சுரேஷ்.

July 22, 2005 10:41 pm  

Post a Comment

<< Home