Wednesday, August 10, 2005

சுய முன்னேற்ற நூல்களின் சாராம்சம் - Part 2

நாம் படிக்கும் பெரும்பாலான சுய முன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களில் கொடுத்திருப்பவற்றின் சாராம்சத்தை வகைப்படுத்தி பட்டியலிடலாம் என்று நினைத்தேன்.

சுயம் சம்பந்தப்பட்டவை:
1) தன்னம்பிக்கை
2) முடிவெடுக்கும் திறமை.
3) தெளிவான சிந்தனை.
4) வாழ்க்கையில் குறிக்கோள்.
5) திட்டமிடல்.
6) மனோதைரியம்.
7) ஆக்கபூர்வமான சிந்தனை.
8) assertiveness (மன உறுதி)
9) வருமுன் காத்தல்.
10) பொறுப்பேற்றுக்கொள்ளுதல்.
11) ஆரோக்கியமான உடல்
12) ஒழுக்கம்.
13) கடுமையான உழைப்பு

சமூகம் சார்ந்தவை:
1) இனிமையான பேச்சு
2) வாக்குத்தவறாமை.
3) நம்பகத்தன்மை.
4) பிறர் சொல்லுதை கேட்கும் தன்மை.
5) உதவும் தன்மை.
6) leadership skills.
7) நேர்மை.
8) நேரந்தவறாமை
9) அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தல்.
10) நகைச்சுவை உணர்ச்சி
11) பிறருக்கு உண்மையாக இருத்தல்.
12) கடமை உணர்ச்சி

உத்திகள்(techniques):
1) தியானம்
2) யோகா
3) உடற்பயிற்சி
4) நம்மை நாமே motivate பண்ணிக்கொள்ள உதவும் auto suggestion techniques.
5) பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள உதவும் உத்திகள்.
6) நேரத்தை நிர்வாகித்தல் தொடர்பான உத்திகள்.
7) Prayer(இது ஒருவிதமான goal setting technique)


கேள்விகள்:

மேலே கொடுத்திருப்பவற்றில் நமக்கு எதைப்பற்றி தெரியாது? சொல்லுங்கள். நமக்கு எல்லாவற்றைப்பற்றியும் தெரியும். ஆனால் நம்மால் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்திவிட முடிவதில்லையே ஏன்? நடைமுறைப்படுத்த ஆசை ஆனால் எது முக்கியம் என்று தெரியவில்லையே ஏன்?... சிலவற்றையாவது நடைமுறைப்படுத்த சுத்தமாக நேரமே கிடைப்பதில்லையே ஏன்? சிலவற்றை சிலநாட்களுக்கு நடைமுறைப்படுத்தினாலும் அவற்றை தொடர்ந்து செய்ய முடிவதில்லையே ஏன்? எல்லாவற்றையும் நாம் நடைமுறைப்படுத்துவதாக நினைத்தாலும் சுற்றியிருப்பவர்கள் சரியில்லாததால் எல்லாம் வீணென்று நாம் நினைப்பது ஏன்?

so.. பிரச்சினை இருப்பது இனிமையான வாழ்க்கை எப்படி வாழ்வது என்பது தெரியாமல் இருப்பதல்ல !!!!. அவற்றை நடைமுறைப்படுத்தமுடியாமையில் நாம் காரணம் கற்பித்தலில் இருக்கிறது. சரி எப்படி நடைமுறைப்படுத்துவது என்று கேட்கிறீர்களா? கணினி மற்றும் தொலைக்காட்சி இல்லாத தனிமையில் அமருவோம், சிந்திப்போம்.

(தொடரும்)

9 Comments:

Blogger டண்டணக்கா said...

அருமை. நன்றாக வகை படுத்தியிருக்கீங்க... ஆனா கீழ்கண்ட வகைதான் புரியல !!!
9) அடுத்தவரின் சுதந்திரத்தை மறுத்தல்.

-டண்டணக்கா

August 11, 2005 3:26 pm  
Blogger Suresh said...

மன்னிக்கவும்...

அது.. அடுத்தவரின் சுதந்திரத்தை மதித்தல்..... :-)

திருத்திவிட்டேன். நன்றி டண்டனக்கா !!

August 11, 2005 3:40 pm  
Blogger Machi said...

அடுத்தவர் கருத்தை மறுத்தலிக்காமல் மதித்தற்கு பாராட்டுக்கள் :-))
ஆளுமை அல்லது ஆளும் திறன் என்பது " Leadership skills " க்கு சரியான தமிழ் மொழியாக்கம் என்று நினைக்கிறேன்.
" Motivate " க்கு இங்கு ஊக்கப்படுத்திக்கொள்ளல் என்பது சரியான சொல்லாடலாக (வார்த்தை பிரயோகமாக) இருக்கும் என்று நினைக்கிறேன்.
" Prayer " க்கு இங்கு வேண்டுதல் சரியான சொல்லா? தெரியவில்லை.

இந்த தொடரை விடாமல் படிக்க போகிறேன்.

August 11, 2005 4:20 pm  
Blogger Suresh said...

நன்றி குறும்பன்.

leadership -க்கு முதலில் தலைமைப்பண்பு என்று எழுதிப்பார்த்தேன். சரியாக வரவில்லை. மாற்றிவிட்டேன். ஆளும் திறன் என்றால் management இல்லையா?
ஊக்கம் என்றால் encouragement இல்லையா?

August 11, 2005 10:36 pm  
Anonymous Anonymous said...

unga list il paarunga thirukural adhigaram perkal appadiye irukku.
onnan classlerndhu padichum nadaimurai padutha mudiyadhadhu sogam.

August 12, 2005 3:28 pm  
Blogger Machi said...

" management" க்கு நிர்வாகதிறன் என்பது சரியான வார்த்தை. "skill" க்கு திறன் சரியான சொல். உற்சாகப்படுத்துதல் என்பது "encourage" க்கு சரியான சொல். ஊக்கம் என்பது மிக அற்புதமான ஆற்றலுள்ள பல இடங்களில் பயன்படும் சொல். கிரியாவின் தமிழ் அகராதி வாங்கி இதன் மற்ற பொருள்களை பார்க்கணும். ஆங்கிலத்தை அப்படியே தமிழ் படுத்தினால் குழப்பம் தான் :-) அதற்கு ஈடான தமிழ் வார்த்தையை பயன்படுத்துவது தான் சிறந்தது, சரியானது. ஹலோவிற்கு என்ன தமிழ் வார்த்தையென்று கேட்டார்கள், தமிழில் ஹலோவிற்கு நேரான வார்த்தை கிடையாது. குமுதத்தில் சுஜாதாவும் குறிப்பிட்டு என் ஐயத்தை போக்கினார். "preyar" க்கு வேண்டுதலை விட வழிபாடு சிறந்ததோ?. நீர் வீழ்ச்சி கூட ஆங்கிலத்திதை தமிழ்ப்படுத்தி வந்த வார்த்தையென்று படித்தேன். அருவி தான் சரியான சொல்லாம்.

August 13, 2005 4:51 pm  
Blogger Suresh said...

அனானிமஸ்,

திருக்குறள் அதிகாரத்திலிருக்கும் பெயர்கள் இருக்கின்றன என்று குறிப்பிட்டுப்பதற்கு நன்றி. இது திருக்குறளை மீண்டும் படிக்க வேண்டும் என்று தூண்டுகின்றது.

குறும்பன்,

management- நிர்வாகத்திறன்.
leadership- ஆளும்திறன்
skill - திறன்.
encourage - உற்சாகப்படுத்துதல்
motivate -ஊக்கப்படுத்துதல்.

ஹ்ம்ம்...சரியாக வருகிறது என்று நினைக்கிறேன். நன்றி.....

August 14, 2005 12:08 am  
Anonymous Anonymous said...

ullooril o-c iyil kidaikkum thirukkuralai vida imported sarakku 1000$ seminar il kidaithaal
madhipu adhigam. idhu innum sogam.

August 15, 2005 8:23 pm  
Blogger Suresh said...

அனானிமஸ்,

சரியாக சொன்னீர்கள். திருக்குறள் மற்றும் கீதையில் இல்லாத வாழ்க்கை நெறி முறைகளா?..... நமது அருமை சில சமயம் அயலார் சொன்ன பின்புதான் நமக்கு புரிகிறது.

August 21, 2005 8:47 pm  

Post a Comment

<< Home