எது முக்கியம்? எப்படி ஆரம்பிப்பது? - Part 3
போன பதிவில் சுய முன்னேற்ற நூல்களின் சாராம்சத்தை பார்த்தோம். மேலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமையில் நாம் கற்பிக்கும் காரணங்களையும் பார்த்தோம்.
எல்லாம் தெரியும் நமக்கு. ஆனால் எதிலிருந்து ஆரம்பிப்பது?
அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கற்பிக்க மனிதனின் உடற்கூறுகளை உதாரணமாக காட்டுவார்கள். இப்போது எதிலிருந்து ஆரம்பிப்பது என்று விளக்க நாம் கம்ப்யூட்டர் பாகங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு நல்ல கம்ப்யூட்டரை எவை உருவாக்குகின்றன.
1) நல்ல specification உள்ள hardware.
2) நல்ல processor
2) நல்ல ஒரு operating system.
3) நல்ல softwares
4) நல்ல bandwidth உள்ள internet connection.
இதுவும் எல்லோருக்கும் தெரிந்தது தானே!!. இங்கு disclaimer எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். எனக்கென்னவோ ஒரு ideal மனிதனை அடையாளமாக எடுத்துக்கொண்டு தான் கம்ப்யூட்டரையே உருவாக்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
அதன் படி பார்த்தால், நமக்கு மிகவும் முக்கியமானது, ஆரோக்கியமான உடல்.
துரதிஷ்ட வசமாக கம்ப்யூட்டரை upgrade செய்வது போல் உடல் பாகங்களை upgrade செய்ய இயலாது :-)
எனவே, இருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது முக்கியமாகிவிட்டது.
எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது?
1) நல்ல உணவுப்பழக்கம்
2) உடற்பயிற்சி.
3) நல்ல தூக்கம்.
4. ஏதாவது ஒரு விளையாட்டில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளல்.
இதில் ஒன்று கவனித்தீர்கள் என்றால், நல்ல மன உறுதி இருந்தால் தான் இவற்றை தொடர்ந்து செய்ய இயலும். ஆனால் மனம் உறுதிப்படுவதற்கு நல்ல ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். எனவே மனப்பயிற்சி, உடல் பயிற்சி இரண்டிற்குமான ஒரு balance மிகவும் முக்கியம்..
உடற்பயிற்சி என்றால், ஒன்றும் பெரிதாக உடற்பயிற்சிக்கூடத்திற்க்கு போய் தான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
-பக்கத்திலிருக்கும் கடைக்கு நடந்து போய் வரலாம்.
-அலுவலகம் நடக்கும் தூரத்திலிருந்தால் நடந்து போய் வரலாம். சற்று தூரத்தில் இருந்தால் சைக்கிளில் செல்லலாம்.
-lift உபயோகிக்காமல், படியில் நடந்தேறலாம்.
-நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தல் நடத்தல் கூட ஒருவகையில் உடற்பயிற்சி தான். நாம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
-அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து கொண்டே செய்யக்கூடிய stretching உடற்பயிற்சிகள் நிறைய இருக்கின்றன.
இதற்கு அடுத்த லெவலில், நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் அசைவு கொடுக்கும் அற்புதமான ஒரு உடற்பயிற்சி - 'சூரிய நமஸ்கரணம்'. இது ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, சிறந்த மூச்சுப்பயிற்சியும் கூட...கற்றுக்கொள்வதும் மிகவும் எளிது.
மேலே உள்ள படத்தில் சூரிய நமஸ்கரணத்தின் அனைத்து நிலைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிலர் சொல்லுவார்கள், யோகாவை முறையாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று. அது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை. ஆனால் சூர்ய நமஸ்கரணம் ஒரு எளிய ஒன்று.ஒரு முறைதான் முயன்று பார்க்கலாமே !!!
(தொடரும்)

6 Comments:
/*

*/
இந்த மாதிரி காம்ப்ரமைஸ் ஆகுறதான் சரி கிடையாது. தனியாக உடற்பயிற்சிக்கூடத்திற்க்கு போய் மெக்கானிக்கலா உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால், விரைவில் நமக்கே நம்மை பற்றி ஒரு "self-esteem" கூடும், தன்னம்பிக்கையுடன். அதனுடன் சேர்த்து படியேறுதல் என இன்னபிற அன்றாட செயல்பாடுகளையும் செய்வது நன்று.
-டண்டணக்கா
நன்றி டண்டனக்கா,
நீங்கள் சொல்லுவது சரி.. ஆனால் சிறிது சிறிதாக ஆரம்பித்து அடுத்த கட்டத்திற்க்கு செல்வது தான் நீண்ட நாளைக்கு நிலைத்து இருக்கும் என்பது என்னுடைய கருத்து. சிறிய சிறிய வெற்றிகள் மிகுந்த தன்னம்பிக்கையை கொடுக்கும். அந்த தன்னம்பிகை நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.
மூச்சு பயிற்சி பல நோய்களுக்கு நிவாரிணி , குறிப்பா சளித்தொல்லைக்கு ( நான் பயன்படுத்துவது) , மூச்சு பயிற்சியை முறையாக கற்று பயன்படுத்த வேண்டும் என்பது என் ஆசை தங்கள் தயவில் ஒரு உதவி ! சூரிய வணக்க படத்திற்கு நன்றி சுரேஷ்
குறும்பன்,
ப்ரணாயாமம் என்பது ஒரு அருமையான மூச்சுப்பயிற்சி என்று என் குரு பாலகுமாரன் எழுத படித்திருக்கின்றேன். ஆனால் அதை புத்தக அறிவில் கற்றுக்கொள்ள இயலாது என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதை முறையாக கற்றுக்கொள்ள ஆசை.
தொடர்ந்து மிக நல்ல தகவல்களை தந்துகொண்டுள்ளீர்கள் குறிப்பாக இந்த தொடரை தொடர்ந்து படித்துவருகிறேன் (சரி... தெரியுதுதான் படித்தால் மட்டும் போதாது..:) மிக்க நன்றி.
அன்பு
அன்பு, அவதாரம்,
பின்னூட்டத்திற்கு நன்றி.
Post a Comment
<< Home