மனதுடன் ஒரு போராட்டம்...
மனது ஏன் இப்படி படபடக்கிறது. ஒரு செயலை செய்யும்போது அதில் கவனமில்லாமல் வேறு எதற்கோ ஏன் சிந்தனை செல்கிறது. ஒருவேலையை செய்யலாம் என்னும்போது மனதின் மறுபுறம் வேறு வேலையை செய்ய ஆசைப்படுகிறதே !!. அப்போது மனம் என்பது ஒன்றுதானா அல்லது ஒன்றுக்கு மேலா? எப்போதும் ஒரு பரபரப்பு. எதையோ பிடிக்க ஓடுவது போல் ஒரு நிலையின்மை. அப்போது அந்த கணத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பு.
எது வேண்டுமென்று தெரியவில்லை. எதுமுக்கியம் என்று தெரியவில்லை. எது நல்லதென்று புத்திக்கு ஒருவேளை தெரிந்தாலும் அதை செயல்படுத்த முயலும் போது ஏதோ ஒன்று வந்து அதை செய்வதை தடுக்கிறது... தடுக்கும் அது எதுவென்று உற்று நோக்கினால் அதுவும் நம் மனதிலிருந்து தான் புறப்படுகிறது என்று புலப்படுகிறது. இப்போது இவை இரண்டையும் உற்று நோக்கும் இந்த சிந்தனை எதுவென்ற கேள்வி வருகிறது. கேள்விகள் மேல் கேள்வி கேட்டு, கிடைக்கும் பதிலின் மீதும் கேள்வி கேட்டு முடிவில்லாத தொடர் சிந்தனையில் செய்ய வேண்டிய வேலையை விட்டு எங்கோ போய் தூரத்தில் நிற்கிறது மனம். சுதாரித்துக்கொண்டு மீண்டு வருவதற்குள் எந்த இடத்தில் விட்டோம் என்பது மறந்து போய், திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் முழிக்கிறது.
மனதின் ஒருபுறத்துடன் மறுபுறம் போராடி போராடி பின்பு அவை இரண்டும் எதிரிகள் இல்லை என்ற தெளிவு வந்து சரி ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள வைக்க முயற்சிக்கலாம் என்ற ஆசை வருகிறது. அதற்கு ஏதுவாக தளம் ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகிறது.
அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதின் சிந்தனையோட்டத்தை, அது போகும் திசையை தனித்து நின்று உற்று நோக்கினால் மனம் ஓடி ஓடி களைத்துப்போய் எங்கோ போய் நின்று விடுகிறது...அப்போது கிடைக்கும் அமைதி அப்போது கிடைக்கும் தெளிவு இதுவரை அனுபவித்திராத மற்றும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்றாக இருக்கிறது. அப்போது கண்களை திறந்து உலகத்தை திறந்து பார்த்தால் அந்த அனுபவமே புதிதாக இருக்கிறது. அந்த அமைதி போருக்குப்பின் அமைதி என்பார்களே அது போல் மனப்போருக்கு பின் ஏற்படும் அமைதி.
இந்த அமைதியை யாரேனும் எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?

20 Comments:
எத்தனை மனது என்பது புரியாத புதிர் தான் !!
என்ன எழுதலாம் என்ற மனப் போராட்டத்தின் போது எழுதியதா ??
//**மனது ஏன் இப்படி படபடக்கிறது. ஒரு செயலை செய்யும்போது அதில் கவனமில்லாமல் வேறு எதற்கோ ஏன் சிந்தனை செல்கிறது. எதையோ பிடிக்க ஓடுவது போல் ஒரு நிலையின்மை.**//
ப்ளாக்ல ஏதாவது போடனும்னு நினைச்சா எனக்கும் இப்படித்தான் மனது போகுது..என்ன பண்ணறது :-)
சுரேஷ், நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். 'ஜே.ஜே' படித்திருக்கிறீர்களா? சமீபத்தில் மறைந்த சுரா மனித மனதின் நிலையில்லாமையை அங்கே மிக அழகாகச் சொல்லி இருப்பார். படித்து வருடங்கள் பலவாயிற்று. மறுபடியும் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
Ungal Anubavam Enakkum Undaki Irukkirathu! Anaal "Manamponap Pokkile Manithan Pokalama?" "manam Oru Kurangu"
வாங்க சிவா!!..
>>ப்ளாக்ல ஏதாவது போடனும்னு நினைச்சா எனக்கும் இப்படித்தான் மனது போகுது..என்ன பண்ணறது :-) >>
அப்டி போறதையே பதிவா போட்டுடுறது... :-)
நன்றி செல்வராஜ்,
ஜே.ஜே படித்ததில்லை :-( படிக்க ஆசை... இணையத்தில் வாங்கக்கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.
நன்றி ஹமீதப்துல்லா, நிறைய பாடல்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள் போல இருக்கிறது.
நன்றி ஜெகதீஸ்வரன்,
சரியாக சொன்னீர்கள்..
//அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு
//
இதுதான் பிரச்சனையாகவிருக்கிறது
உண்மைதான் நானும் உணர்ந்திருக்கிறேன். மனது தன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கண்ணை இருக்க மூடினாலும் கூட இருட்டிலும் அது எப்படியோ பாதையை கண்டுபிடித்துவிடுகிறது.
அமைதியான பாதையில் நடப்பது, அதிகாலைத் தென்றல், நள்ளிரவில் வானத்தில் வின்மீன்கள் நடத்தும் நாடகம்... இன்னும் நிறைய.. இவையும் கூட அத்தகைய அமைதியை மனதுக்கு தந்து செல்கின்றது. நன்றி.
நல்ல பதிவு சுரேஷ்.. என்ன எழுதுவது, எதை எப்படி நினைப்பது என்று நானும் வியந்தது உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தியான நிலை இன்னும் நான் உணர்ந்ததில்லை.
ஹி ஹி..
கண்ணை இறுக்க மூடினால் எனக்கு தெரியும் விஷயங்களை இங்கே சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.. :P
நானும் , மனசை விட்டுப் பிடிக்கணுமுன்னு' ச்சும்மாவே
கவனிச்சுக்கிட்டு இருப்பேன்.
ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாம நினைவுகள் வந்து சட் சட்டுன்னு மாறும்.
கூடவே 'ஸ்டவ்வை ஆஃப் செஞ்சமா?
இன்னும் என்னவேலை இருக்கு இப்ப அர்ஜண்டா முடிக்க, ராத்திரிக்கு என்ன சமையல்னும் போகும்.
வேடிக்கைதான்.
அப்பப்ப இந்த ஃபோன் அடிச்சு நம்மைக் காப்பாத்திரும்:-)
சுரேஷ்
நல்ல பதிவு. நான் சில சமயம் அமைதியை உணர்ந்த்டிருக்கிறேன். என் பிள்ளை பிறந்த உடன் அவன் முகத்தை பார்த்தபோது அப்படி ஒரு அமைதி இருந்தது.
மற்றபடி தூங்கும் போது கூட எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருக்கும், சில முக்கிய முடிவுகள் வரும்.நல்ல ஓய்வு எடுத்த மாதிரியே இருக்காது. மறுபடியும் தியானம் செய்ய ஆரம்பித்திருக்கிறேன் பார்க்கலாம்
நன்று சுரேஷ்
முதல்ல புடியுங்க பாராட்டை.
முதல் நிலையைக் கடந்துட்டீங்க.
உணர்தல் தான் முதல் நிலை
கேள்வியுடன் கூடிய தேடல் இரண்டாம் நிலை.
ஒருமுறை அந்த அமைதியை உணர்ந்துட்டா
அடிக் ஷன் போல் அமைதியை தக்க வைத்துக் கொள்ளும்,
அதற்கான தேடல் தொடரும்.
அதுவே முதல் வெற்றி.
இது பதிவு எழுதும் விஷயத்தில் மட்டுமல்ல.
பிற விஷயங்களிலும் தான்
ஏன்னா தேடல் நம்ம ஒரு இடத்தில கொண்டுபோய் நிறுத்தும்.
தொடர்ந்து பயிற்சி செய்ய தூண்டும்
பயிற்சியோ போராட்டத்திலிருந்து(மனப் போராட்டம்)விடுவித்து
ஒருமைநிலை அளிக்கும் விழிப்புணர்ச்சியினை அளிக்கும்
அது நிகழும்போது தான் எந்த புறச்சூழலிலும் மனம் முழு விழிப்புணர்வோடு சரியான குழப்பமில்லாத பாதையினை சுட்டிக்காட்டி வழி நடத்தும்
நீங்க அந்த நிலையை அடைஞ்சிடுவீங்க சுரேஷ்
அதற்கான குணாதிசயங்களை,வளர்ச்சியை
உங்களின் உணர்வின் வெளிப்பாட்டில் பார்க்கறேன்
பாராட்டும், வாழ்த்தும் இதோ உங்களுக்கு
முழு மனதுடன்
இதுபோன்ற குழப்பமான மனம் எனக்கும்... அவ்வப்போது இப்படி கண்ணைத்திறந்துகொண்டே யோசித்திருப்பேன். ஆனால், அந்த அமைதி இதுவரை கிடைத்ததில்லை.
அனானி சொன்னதுபோல, பாலா வாசாம் தெரிகிறது வரிகளில்...
சுதாரித்துக்கொண்டு மீண்டு வருவதற்குள் எந்த இடத்தில் விட்டோம் என்பது மறந்து போய், திருவிழாவில் தொலைந்து போன குழந்தைபோல் முழித்தேன் - இந்தப்பதிவைப் படித்துக்கொண்டிருக்கும்போது வேறு பக்கம் போய் திரும்பிவரும்போது:)
மது இன்னொரு பக்கம் அமைதிபத்தி சொல்லி கலக்குறாங்க!
Dear SureshStar, Intha blog Kamal Hasan pesara madiri irukku.
CheersMate...for a fine work!
நன்றி இராமநாதன்,
>>ஹி ஹி..
கண்ணை இறுக்க மூடினால் எனக்கு தெரியும் விஷயங்களை இங்கே சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன்.. :P >>
நீங்கள் இருக்கும் இடம் அப்படி.. :-))
நன்றி துளசி அக்கா,
>>அப்பப்ப இந்த ஃபோன் அடிச்சு நம்மைக் காப்பாத்திரும்:-) >>
:-))))
பத்மா, மதுமிதா,
நீங்களும் இது போன்ற அமைதியை உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை பகிர்ந்ததற்கு நன்றி.
மதுமிதா சொன்னது போல் இதுவும் ஒருவிதமான அடிக்ஷன். உற்சாகப்படுத்தலுக்கு நன்றி மதுமிதா..
நன்றி அன்பு,
பாலகுமாரன் வாசம் தெரிகிறது என்று தெரிவித்தது எனக்குக்கிடைத்த பாராட்டு. கற்றுக்கொண்டதெல்லாம் அவரிடமிருந்து தான்.
நன்றி அனானிமஸ்,
>>Intha blog Kamal Hasan pesara madiri irukku.>>
:-)))
சுரேஷ், ஆங்கில நாவலான "Alchemist" படித்துப்பாருங்கள்..
நன்றி செந்தில்,
>>ஆங்கில நாவலான "Alchemist" படித்துப்பாருங்கள்.. >>
படித்ததில்லை, இப்போது தான் amazon-ல் ஆர்டர் செய்தேன்..படித்துப்பார்க்கிறேன்.
HI Suresh,
I am Gopi...
You've expressed in a very good sense...
I too have felt many times..
Same thinking, position to me also, very nicely described. Especially your writing style, i like it very much, because it is very very familiar, friendly. Wishes!
Same thinking, position to me also, very nicely described. Especially your writing style, i like it very much, because it is very very familiar, friendly. Wishes!
Post a Comment
<< Home