Tuesday, October 11, 2005

ஒரு தேசியின் புலம்பல்கள்...

வெளிநாட்டிற்கு சம்பாதிக்க வருபவர்கள் பற்றி பெரும்பாலோர் நினைப்பது:

1) வெளிநாட்டில் இருக்கும் அனைவரும் ராஜ வாழ்க்கை வாழுகின்றனர்.
2) அவனுக்கென்ன கார், வீடு என்று வசதியாக இருக்கிறான்.
3) வங்கிக்கணக்கில் எக்கச்சக்கமான பணம் வைத்திருப்பான்.
4) எப்போது பணம் கேட்டாலும் அவனால் பணம் அனுப்ப முடியும்.
5) வெளிநாட்டில் இருந்து தொலைபேசியில் இந்தியாவிற்கு பேசுவது இலவசம்.
6) நம்மையெல்லாம் மறந்து விட்டான். பணத்திமிர் அது தான்(சிலவாரங்கள் தொலைபேசியில் பேசாவிட்டால்..)
7) நாம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், உதவி செய்வதற்கு வெளிநாட்டில் இருக்கின்றானே அவன்.
8) பக்கத்து வீட்டவரின் மகன் எவ்வளவு சம்பாதிக்கிறான். இவன் தான் எதுவுமே செய்வதில்லை.
9) பவுண்டு டாலர் மதிப்பு தான் ஏறிக்கொண்டிருக்கிறதே அப்புறம் என்ன?

ஆனால் நிஜம் என்ன?

1) சம்பளத்தில் பெரும்பகுதி வரி கட்டவே போய் விடுகிறது.
2) மற்றொரு பெரும்பகுதி வீட்டு லோன்/வாடகைக்கு போய் விடுகிறது.
3) மற்றும் கவுன்சில் வரி.
4) சொந்தவாகனம் வைத்திருந்தால், இன்சூரன்ஸ், ரோடு வரி, வாகன வரி என்று ஒரு பகுதி போய்விடும். சொந்த வாகனம் இல்லாவிட்டால் ரயில் கட்டணம் பயங்கர அதிகம்.
5) அது ஏன் வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்தால் அதற்குக்கூட வரி.
6) அது போல நேசனல் இன்சூரன்ஸ் என்ற பெயரில் பெரும்பகுதி போய்விடும்.
7) அது போக கவுன்சில் டாக்ஸ், காஸ், எலக்ட்ரிசிடி, இன்டெர்னெட் என்று ஒருவருடைய சம்பளம் முழுவதும் போய்விடுகிறது.
8) இதுபோக கிரெடிட் கார்டுகள் வேறு.
9) வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு போகவேண்டிய செலவு வேறு.
10) வீட்டில் இருவரும் வேலைசெய்தே ஆக வேண்டிய கட்டாயம்.
11) வங்கிகள் சும்மா இருப்பதில்லை, ஏதாவது ஒரு லோன் தானாகவே வந்து கொடுத்து அதைவேறு கட்டவேண்டும்.

வரவு எவ்வளவு இருந்தாலும் அதிவிட செலவும் அதிகமாகத்தான் இருக்கிறது. இதெல்லாம் யாருக்கு புரியப்போகிறது? :-(((

23 comments:

Raaju said...
This comment has been removed by a blog administrator.
யாத்திரிகன் said...

அப்படி இல்லை ராஜூ..

வெளிநாட்டிலும் பிரச்சனைகள் உண்டு.. முள்ளில்லா ரோஜா படுக்கையல்லனு சொல்றார் சுரேஷ்..

ஆனா.. என்னதான் இருந்தாலும் அதிகமாகவே பணம் பார்த்துவிடுகிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை..

பணத்துக்கும் மேல ஒரு வாழ்க்கை இருக்குனு தெரிஞ்சிக்க இப்படி வெளிநாடு வந்து ஒருவருடம் இருந்துட்டா போதும்...

Suresh babu said...

அன்பு ராஜு,

அர்த்தமில்லாமல் புலம்பவில்லை. இது அயல் நாட்டில் வாழும் பெரும்ப்பாலோனோரின் மன வெளிப்பாடு. திரும்பிப்போக ஆசைதான். ஆனால் திரும்பிப்போக முடியாத சூழ்நிலை. புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Suresh babu said...

நன்றி செந்தில்,

என் நண்பன் ஒருவன் தொலைபேசியில் அலைத்து அழாத குறையாக புலம்பியதன் வெளிப்பாடுதான் இந்த பதிவு.

>>பணத்துக்கும் மேல ஒரு வாழ்க்கை இருக்குனு தெரிஞ்சிக்க இப்படி வெளிநாடு வந்து ஒருவருடம் இருந்துட்டா போதும்... >>

உண்மை.

Raaju said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Raaju அது தேசிய புலம்பல்கள் இல்லை தேசியின் புலம்பல்கள். (NRI- அதாவது Non Reliable Indians)

Raaju said...
This comment has been removed by a blog administrator.
இராமநாதன் said...

சுரேஷ்,
வரி கட்டுகிறோம் என்றெல்லாம் சொன்னாலும், இந்தியாவில் இருப்பதைவிட நாலைந்து மடங்கு அதிகமாக சம்பாதிப்பதன் மூலம் சேமிக்க முடியும் தொகையும் அதிகம்.

அதே சமயத்தில், வெளிநாடுகளில் வாழ்வதின் சிரமமங்கள் தாய்நாட்டிலேயே இருப்பவர்களுக்கு புரியாது. பலரும் commitments க்காகவே வெளிநாட்டில் வீட்டை பிரிந்து வாழ்கிறார்கள் என்பது உண்மை.

Suresh babu said...

ராஜூ,

ரொம்ப கோபமா இருக்குறீங்க போல :-)

>>இந்த லிஸ்ட பாத்தா ஏதோ பீற்றி கொள்வது மாதிரி தான் எனக்கு பட்டது >>
இதப்பாத்தா ஒங்களுக்கு பீற்றிக்கொள்வது மாதிரியா இருக்கு ??
அது செலவுப்பட்டியல்.. அய்யா.. செலவுப்பட்டியல்.. அதில் எந்தவிதமான பீற்றலும் இல்லை.

>>"வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா போக வேண்டிய செலவு" - இதெல்லாம் ரொம்ப கஷ்டமான செலவா :-) >>
இது கஷ்டமான செலவு என்று எங்காவது நான் சொல்லியிருக்கின்றேனா?

>>இரண்டு பேரும் வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாயம்" - ஐயா! இது உங்க பண பேராசை.>>

பேராசை இல்லை ராஜூ!!.. கட்டாயம்..

>>எதுக்கு "தேசிய புலம்பல்"னு தலைப்பு >>
உங்கள் கோபத்திற்கான காரணம் இப்போது புரிகிறது.. அது தேசியின்(தேசிகளின்) புலம்பல்... விளக்க்த்திற்கு நன்றி அனானிமஸ்.
:-))

Suresh babu said...

இன்னொன்னு ராஜூ,

>>கழுதைக்கு வரி கட்டரேன் >>

இங்கு கழுதைக்கு(மட்டும்தான்) வரி கிடையாதுன்னு நினைக்கிறேன். :-))

இராதாகிருஷ்ணன் said...

குழந்தைகள் என்று வந்துவிட்டால் இரண்டாவது பட்டியல் இன்னும் நீளும்.

துளசி கோபால் said...

ஹூம்ம்ம்ம்ம்ம்ம்

டி ராஜ்/ DRaj said...

சுரேஷ், நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களிலும் உடன்படுகிறேன். இதைத்தவிர
//வங்கிகள் சும்மா இருப்பதில்லை, ஏதாவது ஒரு லோன் தானாகவே வந்து கொடுத்து அதைவேறு கட்டவேண்டும்//

One has to know his/her own limits.

Pot"tea" kadai said...

சகோ, முற்றிலும் உண்மை! என்ன தான் கஷ்டமாக இருந்தாலும் "காலம் பொன் போன்றது" என்ற பழமொழியை நம்மூரில் கூட வெற்றி கொள்ளலாம் இங்கே இயலாது. அந்த வகையில் அயல் நாட்டில் கற்றுக் கொண்டது ஏராளம்.

Dubukku said...

One thing is for sure
the way ppl look at you is certainly different after your become a NRI.

Inbtwn off track
Suresh we are planning to conduct a deepavali get together just for some fun party games and good food. Would you be interested? Will email you the details if you could let me know your email id. thanks.

Suresh babu said...

நன்றி இராமநாதன்,இராதாகிருஷ்ணன்.

துளசி அக்கா,

>>ஹூம்ம்ம்ம்ம்ம்ம்>>

இதற்கு அர்த்தம் என்ன??? :-)


நன்றி ராஜ்,

>>One has to know his/her own limits. >>

நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி..


நன்றி சத்யா..

நன்றி டுபுக்கு,

உங்கள் பதிவை பார்த்தேன்... ஆனால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை. அந்த சமயத்தில் பாரிஸ் பயணத்திற்கு திட்டமிட்டிருக்கிறோம். என் email ID--> sureshinuk@யாஹூ.co.uk

Go.Ganesh said...

ஆமாங்க சமீபத்தில் பத்மா அரவிந்தும் புலம்பெயர்பவர்கள் பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தார். அழகாச் சொல்லியிருக்கீங்க. வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனதுமே புதிதாய் நிறைய சொந்தங்கள் முளைத்திருக்குமே :-)

Anonymous said...

This is true. Especially "foreignla irukkaravanga ellam car, dishwasher etcnu vachukittu sogusa vazharanga" feeling is really true among the relatives back home. We own more than one car because there is no public transport to go to work. I agree with the telephone calls as well, people have a feeling as though it is free to call from here. Every year India trip is not a joke. People who go home from overseas do not just pay for the tickets, the shopping trip before the trip is to be considered. Once we are in India, since we are from overseas, we pay for all the local expenses too. When I was working in a different city from my hometown(ofcourse in a very good job), no one expected me to buy things for them. But in all the trip back to India, every other relative (whom I hardly meet!) is expecting something from us. The part which hurts me more is "we can't get something special for those cousins/relatives whom we treasure really. It sometimes gets us into questions like avanukku mattum appadi vaangi koduthane, enakku appadi tharalaye"nu. Buying gifts for all the relatives (Yosichu, luggage problem parthu, shopping centre koottathil nasungi)is a time consuming task too. Quite a few of our friends share the same feeling. And working overseas is most of the time because of the circumstances. Adhukku oru thani padhive podalam. Sorry for the long comments!

Suresh babu said...

நன்றி கணேஷ்,

பத்மாவின் பதிவை பார்த்தேன். பெரும்பாலானோருக்கு ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும் கணேஷ்.. ஆனால் வெளியே சொல்லுவது இல்லை. அவ்வளவு தான்.

நன்றி அனானிமஸ்,

உங்களின் விளக்கமான பின்னூட்டம் பெரும்பாலானோரின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

kal said...

Hey, it is a nice post. Anonymous, Nice to know that there are a few more who feel like me. And definitely it is not winging or whining. We all love our family, relatives etc, but that doesn't mean that we can't share our feeling regarding this. Writing such a blog doesnt mean that we dont like them, it is just a feeling.

I remember sharing a similar feeling with a friend of mine (avarukku pidingugindra sondha bandhangal endru peridhaga illai and his India trip is once in 6/7 years) and he got all annoyed with me for having such a feeling. Anyhow ovvoruthar soozhnilaiyum ovvoru madhiri.

Evaraiyavadhu punpadithu irundhal mannikkavum.

Anonymous said...

its good

பிரதீப் said...

அங்கயும் இந்தப் பாடுதானாய்யா..
இந்தியாவிலும் ஒண்ணும் சளைக்கவில்லை... மாதச் சம்பளக்காரர்கள்தான் அவர்களின் ஒரே இலக்கு. ஆனால் என்ன, நம்ம ஊரு போல வருமாங்கறேன்.

Suresh babu said...

kal, anonymous, ப்ரதீப்,

பின்னூட்டத்திற்கு நன்றி..