பிரபலங்களிடம் தான் அப்படி என்ன ஈர்ப்பு !!
இப்போது தான் இந்த படத்தை ஆனந்த விகடனில் பார்க்க நேர்ந்தது.
பார்த்தவுடன் படத்தில் கவனிக்கத்தோன்றியது சுற்றியுள்ள ரசிகர்களின் முகத்தில் உள்ள பரவசம். பாருங்களேன் உங்களுக்கே தெரியும்.
எதனால் அப்படி?
-எல்லோருக்கும் தெரிந்த பிரபலமானவரை நான் நேரில் சந்தித்தேன் என்பதை எல்லோரிடமும் சொல்லிப்பெருமைப்படலாம் என்பதில் வரும் ஒரு நிமிட சந்தோஷமா?
-திரையில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட பிரபலத்தை ஒரு சக மனிதராக நேரில் சந்திக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியின் வெளிப்பாடா?
பார்த்தவுடன் படத்தில் கவனிக்கத்தோன்றியது சுற்றியுள்ள ரசிகர்களின் முகத்தில் உள்ள பரவசம். பாருங்களேன் உங்களுக்கே தெரியும்.
எதனால் அப்படி?
-எல்லோருக்கும் தெரிந்த பிரபலமானவரை நான் நேரில் சந்தித்தேன் என்பதை எல்லோரிடமும் சொல்லிப்பெருமைப்படலாம் என்பதில் வரும் ஒரு நிமிட சந்தோஷமா?
-திரையில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட பிரபலத்தை ஒரு சக மனிதராக நேரில் சந்திக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியின் வெளிப்பாடா?
9 Comments:
I had the same feeling when I saw this article in vikatan.
எதனால் அந்த பரவசம் வருகிறது என்று வரையறுக்க முடிந்துவிட்டால், அதை சரி செய்யவும் ஒரு வழி கண்டுபிடித்துவிடலாமே!
பெருமை, அதிர்ச்சி, சந்தோசம் போன்ற உணர்வுகள் கடந்து `அதையும் தாண்டி புனிதமானது'- அவர்களின் ரசிகர்களிடம் கேளுங்கள்- ஒரு காவியமே பாடுவார்கள்!!
உண்மையைச் சொல்லுங்கள் அந்த இடத்தில் ஐஸ்வர்யாராய் இருந்தால் நீங்கள் கண்டுகொள்ளாமல் சென்றிருப்பீர்களா??
thanu.. சரியாக கேட்டீர்கள்.
சிலருக்கு சினிமா நடிகர் நடிகைகள், சிலருக்கு விளையாட்டு வீரர்கள், சிலருக்கு அரசியல்வாதிகள், சிலருக்கு பிரபலமான எழுத்தாளர்கள்... இது தவறென்று சொல்லவில்லை.. அந்த பரவசம் ஏன் வந்ததென்று யோசித்ததில் எழுதியது..
இருக்கலாம் சுரேஷ்
அது நாம பிரபலமாகும் போது தான் தெரியும்னு நினைக்கிறேன். நம்மை பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன ரியாக்ஷன் கொடுக்கிறாங்கன்னு ஒரு பதிவும் போடலாம்:-)
கணேஷ்,
//நம்மை பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன ரியாக்ஷன் கொடுக்கிறாங்கன்னு ஒரு...//
இருங்க இருங்க. என்னை பாக்கறப்ப என்ன ரீயாக்ஷன்'னு பார்க்கணும்:-)))))
ஜென்ம சாபல்யம்-னு சொல்வாங்களே.. அந்தப் பரவசம் தெரியுது சுத்தியிருக்கறவங்க முகத்திலெல்லாம்.
இது பொதுவா எல்லா பிரபலங்களையும் நம்மையுமறியாமல் மனித லெவலுக்கு ஒருபடி மேலே ஒரு demi-god status கொடுப்பதாலோ? ரஜினிகாந்துக்கும், ரஹ்மானுக்கும் மட்டுமல்ல. தியாகுவிற்கும், எஸ் எஸ்-சுக்கும் கூட இதே அளவு கூட்டமும் பரவசமும் உண்டு. எல்லா ஊரிலேயும் இது இருக்கிறது. நம்மூரில் கொஞ்சம் அதிகப்படி. அவ்ளோதான்.
சுரேஷ்.
அந்த வட்டம் போடாம் ஒரு முகம் பார்த்தீங்களா.. தனுஷ்க்கு ரொம்ப நெருக்கமா.. காக்கி சட்டைக்கு பின்னாடி.. கொஞ்சம் வித்தியாசமா இருக்க்குது..
அட! நம்ம கூட ஈசியா ஹீரோ ஆகி இருக்கலாம் போல னு நெனைக்கிற மாதிரி இருக்கு... !
//அட! நம்ம கூட ஈசியா ஹீரோ ஆகி இருக்கலாம் போல னு நெனைக்கிற மாதிரி இருக்கு... !
//
இது வீ.எம். பஞ்ச், அப்பாலிக்கா இந்த படத்துல சிம்பு இருப்பதே எனக்கு தெரியலை, விகடன்ல படிச்ச பிறகுதான் தெரிஞ்சிது, அப்பாலிக்கா இரண்டு நடிகர்கள் குறுக்கால நடந்து போறதுக்கெல்லாம் கவர் ஸ்டோரி போடுற விகடனை என்ன சொல்றது போங்க
கணேஷ்.. ஒருநாள் நாமும் துளசி அக்கா போல் பிரபலமாவோம்... கவலைப்படாதீர்கள்..
ராமநாதன்..எல்லா ஊரிலும் அப்படித்தான்.. மைக்கேல் ஜாக்சனின் விசிறிகள் அவரை பார்த்த பரவசத்தில் கதறி அழுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
வீ.எம் :-) நீங்கள் சொன்னவரை முதலில் பார்த்த போது இவர் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறார் என்று நினைத்தேன். நீங்கள் சொன்னபிறகு அப்படிக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. :-)
குழலி,
விகடன் போகும் போக்கை நினைத்தால் சற்று கவலையாக இருக்கிறது. சொல்லப்போனால் விகடன் வலைப்பக்கத்திற்கு போவதற்கு முன்னால் யாரும் பக்கத்தில் இல்லாதவாறு என்று பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. எனக்கென்னவோ அருவருப்பான ஆபாசப்படங்களை வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு தான் கட்டுரை எழுதுகிறார்களோ என்று தோன்றுகிறது.
Post a Comment
<< Home