Monday, August 15, 2005

KISS - Keep It Short & Simple - Part 5

போன பதிவில் சீரான உணவுகளை பற்றியும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப்பற்றியும் பார்த்தோம். இந்த பதிவில் ஆரோக்கியமான உணவை சரியான அளவில் உண்பது என்பது பற்றி பரிசீலிப்போம்.

நாம் தேவைக்கதிகமாக உண்கிறோமா இல்லையா என்பதற்கான முக்கியமான காட்டி என்பது நமது உடலின் எடை தான். ஆரோக்கியமான உணவு, அதற்கேற்ற உடல் அசைவு என்பது மட்டுமே நமது உடலின் எடையை கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

நாம் நமது உயரத்திற்கு ஏற்ற எடைக்குள் இருக்கின்றோமா என்பதை கண்டு பிடிக்க BMI (Body Mass Index) Ratio என்ற விகிதக்கணக்கு உதவுகிறது.

கீழ்க்கண்ட படம் நமது உயரத்திற்கு நாம் எவ்வளவு எடை இருக்கலாம் என்று கண்டுபிடிக்க உதவுகிறது.


நீங்கள் OK என்றிருக்கும் விகிதத்துக்குள் இருந்தால், keyboard மற்றும் mouse-லிருந்து கையை எடுங்கள்......., வலது கையை மேலே தூக்குங்கள்......., அப்படியே பின்புறமாக கொண்டு செல்லுங்கள்......., அப்படியே உங்கள் முதுகில் மூன்று முறை தட்டிக்கொண்டு சத்தமாக சொல்லுங்கள்...... "Well done".

சரி Over weight என்று இருப்பவர்கள் எல்லாம்?....ஒன்றும் குடிமுழுகிப்போய்விடவில்லை. இப்போது பிரச்சினை எதுவென்று உணரத்தொடங்கிவிட்டீர்கள். அதுவே பாதி வெற்றி தான்.

Fat & Very Fat என்று இருக்கும் எடைக்குள் இருப்பவர்கள்.........this is the high time. நீங்கள் உடல் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றீர்கள்.

இதற்கு இரண்டு பதிவுகளுக்கு முன்னால் எப்படி சிறிய அளவில் உடற்பயிற்சிகளை ஆரம்பிப்பது என்று பார்த்தோம். அனைவருக்கும் KISS பிடிக்கும் இல்லையா?... அதாவது Keep It Short & Simple....:-) ... சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வது மனதுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கின்றது. அந்த தன்னம்பிக்கை நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.

சுறுசுறுப்பான வாழ்க்கை நமக்கு,

-நல்ல உடல்வாகு
-அதிக தெம்பு மற்றும் உற்சாகம்
-அதனால் நல்ல சுய நம்பிக்கை.
-அதனால் வாழ்க்கையில் வெற்றிக்கு தேவையான மற்றவை எல்லாமும்......

இப்போது முதலிருந்து வருவோம். முதல் பகுதியில் இயந்திர வாழ்க்கை பற்றியும் அது பற்றிய ஒரு அறிதல் பற்றியும் பார்த்தோம். பின்பு வாழ்க்கையில் வெற்றிக்கான வெவ்வேறு புத்தகங்களில் கொடுக்கப்பட்டவைகளின் சாராம்சத்தைப்பார்த்தோம்.அடுத்த பதிவில் எதிலிருந்து ஆரம்பிப்பது என்று சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் பற்றி பார்த்தோம். அதற்குப்பிறகு சீரான உணவு பற்றியும் ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களைப்பற்றியும் பார்த்தோம்.

நான் முன்பே சொன்னபடி, இதில் நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை. இந்த தொடரின் நோக்கம், தெரிந்த விஷயங்களைக்கொண்டே எளிதான ஒரு ஆரம்பித்தலுக்கான ஒரு தூண்டுதலை ஏற்படுத்துவது தான்.

(தொடரும்)

4 Comments:

Blogger Machi said...

சுரேஷ் இந்த BMI படமானது முழுமையாக இல்லை. BMI ஆனது ஆண்களுக்கு தனி பெண்களுக்கு தனி, வயது/உயரம்/எடை என்ற முறையில் அமைந்த அட்டவணை படம் உள்ளதா? எங்கோ பார்த்த நினைவு, உடனடியாக கிடைக்கவில்லை.

August 16, 2005 3:45 pm  
Blogger Suresh said...

குறும்பன்,
நான் குறிப்பிட்டிருக்கும் படம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியில் பாருங்கள்.
http://www.halls.md/body-mass-index/av.htm

August 19, 2005 2:27 pm  
Blogger Ganesh Gopalasubramanian said...

நல்ல தகவல்கள் சுரேஷ்

August 27, 2005 9:56 am  
Blogger Suresh said...

நன்றி கணேஷ்...

August 27, 2005 10:35 am  

Post a Comment

<< Home