Saturday, August 13, 2005

சீரான உணவு - you are what you eat - Part 4

போன பதிவில் எளிய உடற்பயிற்சிகளுக்கு எப்படி தயாராவது என்று பார்த்தோம். இந்த பதிவில் ஆரோக்கியமான உணவுப்பயிற்சி முறைகளைப்பற்றி பார்க்கலாம்.

நான் முன்பே சொன்னபடி இதில் நமக்கு தெரியாத விஷயங்கள் எதுவும் இல்லை. சில விஷயங்களை திரும்ப திரும்ப படிப்பது மனதில் ஆழமாக பதியும்.

முதலில் இதயத்தைப்பற்றி, இதயம் நமது உடம்புக்குள் டிக்கிகொண்டு இருக்கும் ஒரு பம்ப். அது வாரத்தில் ஏழு நாட்களும், ஒரு நாளில் 24 மணி நேரமும் தொடர்ந்து ரத்தத்தை உடம்புக்குள் ஓடச்செய்து கொண்டு இருக்கிறது. அதற்குப்பதிலாக அது எதிர்பார்ப்பதெல்லாம் குறைந்த அளவிலான தொடர்ந்த பராமரிப்பு தான்.

இதயத்தை சரியாக பராமரிக்க,

1) புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபடுதல்,
2) நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
3) சீரான தேகப்பயிற்சி
4) உடம்பின் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளல்.
5) குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுதல். முடியாவிட்டால், கட்டுப்பாடுள்ள குடிப்பழக்கம்.

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இவற்றைவிட்டால் வேறு மேஜிக் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், இப்போது ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.எனக்கு இதயத்தில் எந்த வலிக்கான அறிகுறியும் இல்லை அதனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். வலிதான் பிரச்சினைகளுக்கான ஒரே அறிகுறி என்பது அறியாமை.

முதலில் சீரான உணவுப்பழக்கத்தைப்பற்றி,

ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை விட்டுவிடச்சொல்வதல்ல. ஆனால் எவ்வளவு தின்னலாம் என்பதைப்பற்றியது. பெரும்பாலோர் டயட் என்றால் வெறும் பழங்களையும், காய்கறிகளையும் தின்பது தான் என்று தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நமது உடம்பு எதிர்பார்ப்பதெல்லாம் வித்தியாசமுள்ள சீரான உணவுகள் தான்.

சீரான உணவு என்றால் என்ன?

எளிதாக புரிந்து கொள்ள நமது உணவுகளை ஐந்து வகைகளாக பிரித்துக்கொள்ளலாம். அதற்கு அருகில் அது எவ்வளவு தேவைப்படுகிறது என்பது சதவீதத்தில்,

1) பழங்கள் மற்றும் காய்கறிகள் - 35%
2) அரிசி,கோதுமை,ப்ரட் மற்றும் கிழங்கு வகைகள் -30%
3) பால் சம்பந்தப்பட்ட உணவுப்பொருள்கள் -15%
4) கொழுப்புசத்து மிகுந்த பொருள்கள் -5%
5) மீன், இறைச்சி அல்லது பயறுவகைகள் - 15%

நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தை முற்றிலும் இன்றே இப்போதே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் இன்றிலிருந்து எளிதான சிறிய மாற்றங்களை ஏற்படுத்திப்பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

கீழ்க்கண்டவற்றை முயற்சித்துப்பாருங்களேன்.
- ஒருநாளைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீர் அருந்துதல்.
- அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை.
- வசதிக்கு தகுந்தது போல் எவ்வளவு பழங்கள் அல்லது பழரசங்கள் முடியுமோ அவ்வளவு.
- உணவை எண்ணையில் வறுத்து உண்பதற்கு பதிலாக அவித்து உண்ணுதல்.
- மீன் உடம்புக்கு நல்லது. இறைச்சிக்கு பதிலாக மீன் அதிகமாக பயன்படுத்தலாம்.
- சக்கரையை குறைத்துக்கோள்ளல் (சக்கரையை சிறிதாக குறைத்துக்கொண்டால் நமக்கு முதல் sip-ல் மட்டும் தான் வித்தியாசத்தை உணர்வோம் அப்புறம் தெரியாது)
- உப்பை குறைத்துக்கொள்ளுதல்.

சீரான உணவு மற்றும் அல்ல, சீரான உணவை எவ்வளவு உண்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதை எப்படி கண்டு பிடிப்பது? அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

4 Comments:

Blogger tamil said...

பயன்தரக்கூடிய பதிவு. மேலும் தொடருங்கள்.

August 14, 2005 7:14 am  
Blogger Suresh said...

நன்றி சண்முகி.

August 14, 2005 10:18 am  
Blogger கயல்விழி said...

பயனுள்ள தகவல்கள். நன்றி!

August 17, 2005 9:08 pm  
Blogger Suresh said...

நன்றி மஞ்சுளா.

August 21, 2005 8:50 pm  

Post a Comment

<< Home