Saturday, August 20, 2005

மன அழுத்தம் (mental stress) - Part 6

இயந்திர வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம். பணப்பிரச்சினை, வேலை மாற்றம், இட மாற்றம் மற்றும் குடும்பப்பிரச்சினைகள் போன்ற எத்தனையோ விஷயங்கள் நமது உணர்ச்சிகளை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. விளைவு மன அழுத்தம்.

இது போன்ற மன அழுத்தம், மனக்குழப்பம், மனச்சோர்வு அனைத்தும் மனித உணர்ச்சிகளின் ஒரு பகுதிதான். ஆனால் அதை எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் நமது வெற்றியே இருக்கிறது. நம்மில் நிறைய பேருக்கு நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்ற ஒன்றே தெரியாமல் இருக்க்கிறது. விளைவு நமது மன அழுத்தின் வெளிப்பாடாக எழும் கோபத்தை வேறு எதன் மீதாவது யார் மீதாவது காண்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதனால் மீண்டும் மன அழுத்தம்.... இப்படியே ஒரு சுழல்...

சரி... நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

- எப்பொழுதும் சோர்வாக இருப்பது
- அளவுக்கதிகமான கோபம்
- எதற்கெடுதாலும் எரிந்து விழுவது.
- சரியான தூக்கமின்மை.
- எதிலும் கவனம் செலுத்த முடியாமை மற்றும் முடிவெடுக்க முடியாமை.
- அதிகமான புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்.

சரி, மன அழுத்தத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நானே சமாளித்துவிடுவேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இதற்கு ஒரே மருந்து பகிர்தல் தான். மனம் விட்டுப்பேசுதல் தான். அது வாழ்க்கை துணையாக இருக்கட்டும் அல்லது நண்பராகவோ அல்லது அதுவும் இல்லாவிட்டால் நமது சுயத்தை தெரிவிக்காமல் பகிர்தலுக்காகவென்றே நிறைய குழுக்களும் இணையத்தில் இருக்கின்றன. அதுவும் முடியாவிட்டால் நல்ல மருத்துவரை நாடுவது தான் நல்லது.

பெண்களாவது பரவாயில்லை... ஆண்கள் பெரும்பாலும் வேரொருவடன் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மனம் விட்டுப்பேசுவதில்லை. உள்ளுக்குள் வைத்து புழுங்கிக்கொண்டிருப்பது மன அழுத்தத்தை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

பகிர்தலைத்தவிர மன அழுத்தத்தை குறைக்க வேறென்ன செய்யலாம்?

-தியானம் - மிக முக்கியமான ஒன்று. அவை உங்களின் சுயத்தை உணர்வதற்கு உதவுகின்றன. இதைப்பற்றி பின்பு வரும் பதிவுகளில் நிறைய பார்க்கலாம்.
-ஏதாவது விளையாட்டு, கலை அல்லது இசையில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

இதை முயற்சி செய்து பாருங்கள்.

- அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்று மகன்/மகள், அல்லது நண்பர்களுடன் சென்று எளிய விளையாட்டுக்களை விளையாடுதல்.(பந்து, தட்டு விளையாட்டு)
- நல்ல மனதுக்குப்பிடித்த இசையை கேட்டல்
- நல்ல புத்தகங்களை படிப்பதற்கு நேரம் ஒதுக்கி படித்தல்.
- நம் பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டு இனிமையான பழைய நினைவுகளை தட்டி எழுப்பி பகிர்ந்து கொள்ளல்.
- அதிகாலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்திரித்து நடை, ஓட்டம் அல்லது cycling செல்வது உடற்பயிற்சி மட்டும் அல்ல, மனப்பயிற்சியும் கூட.

அதிகாலையில் எழும்பும் சூரியன் எவ்வளவு அழகு தெரியுமா?

7 Comments:

Blogger மயிலாடுதுறை சிவா said...

சுரேஷ்
உங்களது அனைத்து பதிவுகளையும் படித்து வருகிறேன்.
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். அப்படியே நீங்கள் படிக்கும் தன்னம்பிக்கை
ஆங்கில அல்லது தமிழ் புத்தகங்கள் பெயரையும் வெளியிடுங்கள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

August 20, 2005 3:03 pm  
Blogger Suresh said...

சிவா,

பாராட்டுக்கு நன்றி. நான் முழுவதும் படித்து முடித்த ஒரே தன்னம்பிக்கையூட்டும் புத்தகம் '7 habits of Highly effective people' by Steven Covey. இந்த புத்தகத்தைப்பற்றி ஒரு தனிப்பதிவு போடலாம் என்று இருக்கின்றேன்.

August 20, 2005 6:11 pm  
Anonymous Anonymous said...

அட.. அசத்தலா இருக்குங்க உங்க பதிவுகள்.
சாப்பாடு சரியா சாப்டாதது அல்லது ரொம்ப அதிகமா சாப்டறதக்கூட மன அழுத்ததோட அடையாளங்களா சொல்றாங்க.
தியானம், இசைமாதிரி, வாக்கிங் மாதிரி சின்ன உடற்பயிற்சிகள் செய்யறதும் மன அழுத்தத்த கொறைக்கும்ன்னும் படிச்சிருக்கேன்.

சரவ்.

August 20, 2005 8:41 pm  
Blogger Suresh said...

சரவ்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

August 20, 2005 11:14 pm  
Anonymous Anonymous said...

சுரெஷ்
நன்றாக எழுதி இருக்கிறீர்கள். இது பற்றி நான் தொடர்ந்து தமிழோவியத்தில் 5 வாரங்கள் எழுதினேன். அது முழுதும் மருத்துவம் தொடர்பானது.

September 07, 2005 11:55 am  
Blogger தாணு said...

மன அழுத்தம்தான் நிறைய பிரச்னைகளை உருவாக்குகிறது. அவசியம் தேவைப்படும் பதிவு. எளிமையாக தெளிந்த கருத்துக்களுடன் விளக்கியதற்கு வாழ்த்துக்கள்

September 08, 2005 5:49 pm  
Blogger Suresh said...

பத்மா, thanu,

பின்னூட்டத்திற்கு நன்றி..

பத்மா, நீங்கள் எழுதிய தொடரின் சுட்டி கொடுக்க முடியுமா? நன்றி..

September 08, 2005 6:30 pm  

Post a Comment

<< Home