Wednesday, October 19, 2005

அருமை x அருகாமை

பக்கத்தில் இருந்தால் பலவற்றின் அருமை தெரிவதில்லை. யோசித்துப்பார்த்தால், மதுரையில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறோம்...சொன்னால் நம்ப மாட்டீர்கள் இது வரைக்கும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் போனதில்லை. நேற்று என் அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த நண்பர் இந்தியாவில் எந்த இடம்? என்றபோது மதுரை என்றேன். கேட்டவுடன் அவர் முகத்தில் ஒரு பிரகாசம்.. 'மினாக்ஷி டெம்ப்பிள்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறி அவர் அங்கு போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்க தொடங்கினார்... அப்போது தான் நெஞ்சில் சுருக் என்று உறைத்தது.

சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் 'சித்தன்ன வாசல்' குகை ஓவியங்களின் அருமையும், பள்ளியில் அவை பற்றி படித்திருந்தாலும் போகவேண்டுமென்று தோன்றவில்லை. கூகிள் எர்த்தில் பார்த்தவுடன் தான் இராமேஸ்வரம் இருக்கும் அழகு பொங்கும் இடமும் அதன் அருமையும்
தெரியவருகிறது. இத்தனைக்கும் என் சொந்த ஊரிலிருந்து இரண்டு மணி நேர பிரயாண தூரத்தில்.

ஆனால் கல்லூரி நாட்களில் மட்டும் தஞ்சை பெரிய கோயிலுக்கு தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராகிவிடுவது உண்டு.. ஆனால் அது வேறொரு காரணத்துக்காக..... வேறொன்றுமில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரிய கோயிலில் இசை அல்லது நாட்டிய நிகழ்ச்சி நடப்பதை பார்ப்பதற்கு... :-)

அதே போல் தான் அம்மாவும், அம்மாவுடன் கூடவே இருக்கும் வரை அவரின் அருமை தெரியவில்லை. முதன் முதலாக கல்லூரிப்படிப்புக்காக வெளியே வந்தவுடன் தான் அவருடைய அருமை புரிந்தது. ஒரு வயதில் எப்போது பார்த்தாலும் எரிந்து விழுவது.. எதற்கெடுத்தாலும் ஒரு கோபம் என்று அம்மா எது சொன்னாலும் எதிர்த்துப்பேசிக்கொண்டிருந்தது எவ்வளவு தப்பென்று விட்டு விட்டு தூரத்தில் இருக்கும் போது தான் புரிந்தது. அதுவே அவர் பக்கத்தில் எப்போதும் இருக்கும் சூழ்நிலையில் இருந்திருந்தால் இந்த உணர்தல் சாத்தியப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

பக்கத்திலிருக்கும்போதெல்லாம் தினமும் ஒரு முறையாவது சண்டை போட்டுக்கொள்ளும் மனைவியின் அருமையும் அவரது அண்ணனின் திருமணத்திற்காக தனியாக ஊருக்கு போயிருக்கும்போது தான் தெரிந்தது. அக்கா, தம்பி, உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரின் அருமையும் அப்படித்தான்.

அதேபோல் தான் அயல்நாட்டிற்கு வந்தபின் தான் சொந்த நாட்டின் அருமை புரிகிறது. சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா என்று சித்தப்பா ராமராஜன் போல் பாடத்தோன்றுகிறது. இந்தியாவில் இருக்கும் வரை கார்கில் போர், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டு, சுதந்திர, குடியரசு தினங்களின் போது மட்டும் பெரும்பாலும் பொங்கியெழும் தேசப்பற்று இங்கு அயல்நாட்டில் தினமும் ஒருமுறையாவது இந்தியன் என்று அறியப்படுவதால் எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது.

இப்பவாவது அருமை தெரிந்ததே.. அதுவரைக்கும் நல்லது என்கிறீர்களா?... அதுவும் சரிதான். இந்த முறை ஊருக்கு போகும்போது பார்க்கவேண்டிய இடங்கள், கோயில்கள் மற்றும் அன்பு செய்ய வேண்டிய சொந்தங்கள் என்று போட்ட பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது.

14 comments:

tina said...

whatever you said is somewhat true.
want to know how to create a blog in tamil...
thanks

Suresh babu said...

tina,

here is the link to start with,

http://www.thamizmanam.com/xblog/

good luck.

இராமநாதன் said...

நல்ல பதிவு சுரேஷ்

//கல்லூரி நாட்களில் மட்டும் தஞ்சை பெரிய கோயிலுக்கு தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராகிவிடுவது உண்டு//


நம்மூர்லயா படிச்சீங்க? மெயில் போடுங்களேன் ப்ளீஸ்..

travis2001@mail.ru

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//மதுரையில் பதினைந்து வருடங்களுக்கு மேல் வசித்திருக்கிறோம்..//

ஓஹோ. அதான் உங்களை எங்கிட்டோ பாத்த மாரியே இருக்கேன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். :) மதுரைல எங்க?

நிழலின் அருமை வெயிலில் தெரியும்னு என்னிக்கோ சொல்லிட்டாய்ங்கள்ள? என்ன பண்றது சுரேஷ். விலகியிருக்கும் போதுதான் சிலவற்றின் அருமை தெரிகிறது.

ஒரு விதத்தில் இதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் சிலவற்றின் அருமைகளை உணராமலேயே போயிருப்போம். இல்லையா?

அன்புடன்
சுந்தர்.

டி ராஜ்/ DRaj said...

//பக்கத்திலிருக்கும்போதெல்லாம் தினமும் ஒரு முறையாவது சண்டை போட்டுக்கொள்ளும் மனைவியின் அருமையும் ......//
நன்றி சுரேஷ். நான் தனி ஆளில்ல போல :)

Dharumi said...

பார்க்கவேண்டிய இடங்கள், கோயில்கள் மற்றும் அன்பு செய்ய வேண்டிய சொந்தங்கள் என்று போட்ட பட்டியல் கொஞ்சம் நீளமாகவே இருக்கிறது.

--intha thadavai lisitil meenaakshi amman emple uNdu allaavaa?

Anonymous said...

Dear SureshStar,
"Aarumai! Aarumai!"
Made me feel Nostalgic!
Cheers!

Suresh babu said...

நன்றி இராமநாதன்..

வாங்க சுந்தர்,
நம்மூரா நீங்க? நாங்க இருந்தது அண்ணா நகர்ல.. படிச்சது.. தியாகராஜா மாடல் ஸ்கூலில்..

ஆமாம் ராஜ்.. நிறைய பேர் இது மாதிரி இருக்கோம்.

தருமி,

கண்டிப்பா மீனாக்ஷி அம்மன் கோயில் இருக்கு..

அனானிமஸ்,
பின்னூட்டத்திற்கு நன்றி..

G.Ragavan said...

தமிழ் நாட்டை ஒட்டியே இருக்குற பெங்களூருல இருக்குற எனக்கே எத்தனை ஊர்களைப் பார்க்கனுமுன்னு மலைப்பா இருக்கு. பழைய மலைப்பு தமிழ்நாட்டுல மட்டும் இருந்தது. இப்ப அது கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, வங்கம் எல்லாம் தாண்டி சிக்கிம் வரைக்கும் ஓடுது. காங்டாக் வரைக்கும் போயிட்டு சீன எல்லையைப் பார்க்கலைன்னு வருத்தம்.

தாணு said...

`திருநெல்வேலிக்காரன் தேரோட மாட்டான், திருச்செந்தூர்க்காரன் கடலாட மாட்டான்'னு ஒரு வழக்குமொழி உண்டு. அதனாலே அதையெல்லாம் நிராகரித்ததாக அர்த்தமில்லை. திருனெல்வேலியிலேயே இருந்தும் கூட இருட்டுக் கடை அல்வா விக்ரம் மூலம்தான் தெரிஞ்சுது!

Hameed Abdullah said...

Aamam! Ippa Irukkura Idaththulla Ulla Parkka Vaendia MUkkiya Idangalai Ellam Parthachaa? Akkaraikku Ikkarai Pachai!

Dubukku said...

"பக்கத்திலிருக்கும்போதெல்லாம் தினமும் ஒரு முறையாவது சண்டை போட்டுக்கொள்ளும் மனைவியின் அருமையும் அவரது அண்ணனின் திருமணத்திற்காக தனியாக ஊருக்கு போயிருக்கும்போது தான் தெரிந்தது"

- Patta thaan theriyum yaa aamabalaingalukku. ennaiyum serthu thaan sollaren :)))))

Dubukku said...

Inbtwn offtopic Suresh I have sent you an email. Could you pls let me know if your friend is attending or not? Just want to consolidate the numbers for ordering food. thanks.

Suresh babu said...

ராகவன், தாணு, ஹமீத் அப்துல்லா, டுபுக்கு அனைவருக்கும் நன்றி..