Sunday, October 23, 2005

நட்சத்திர வாரத்திற்கு நன்றி...

நட்சத்திர வாரத்திற்கு வாய்ப்பு கொடுத்த மதிக்கு மற்றும் பார்த்து படித்த மற்றும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்கவை.

1) ஐம்பதாவது பதிவு
2) பத்தாயிரமாவது பார்வையாளர்.
3) பிறந்த நாள் வாழ்த்துக்கு நமது ஜனாதிபதியிடமிருந்து நன்றி கடிதம்..
4) கடுமையான வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த ஒரு வாரத்தில் ஒன்பது பதிவுகள், ஆயிரத்து ஐநூறு பார்வைகள்.

இந்த வாரத்தில் வெளிவந்த சக வலைப்பதிவாளர்களின் அனைத்துபதிவுகளையும் படிக்கமுடியவில்லை. அவை அனைத்தையும் இந்த வாரத்தில் படிப்பதாக உத்தேசம்.

தங்கர் மற்றும் குஷ்பு வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் தமிழ்மணத்தில் சூடான தலைப்பாக தமிழ்மணத்தில் காசி அவர்கள் எடுத்த சில நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் இருந்தன. என்னைப்போறுத்தவரை தமிழ்மணம் எனக்கு தமிழில் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த ஒரு தளம். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த காசி அவர்களுக்கு கண்டிப்பாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

சில மத சார்பான விரோத மனப்பான்மையை தூண்டும் சில பதிவுகளைப்படிக்கும்போது இவையெல்லாம் எந்த அளவுக்கு விரோத மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கின்றன என்று வருத்தமாக இருந்தது. இவற்றையெல்லாம் தமிழ்மணத்தில் தடை செய்யக்கூடாதா? என்று ஆதங்கமாக இருந்தது உண்மை. ஆனால் ஒரு நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் எடுக்கும்போது எந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடந்த வாரத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இணையக் குசும்பன் மற்றும் சின்னவன் இருவரின் பதிவுகள் நீக்கப்பட்டது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது உண்மை. தமிழ்மணத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் இதில் சேர்ந்தோம் என்பது உண்மையான வாதமாக இருந்தாலும் அனைவரும் காசியின் முடிவுக்கு எதிராக கருத்துக்களை சொல்வது என்பது எதற்காக என்று பார்த்தால், தமிழ்மணம் பெரும்பாலும் ஒரு நிறுவனத்துக்கு மேலாக, ஒரு குடும்பமாகவே பார்க்கப்பட்டதால் தான்.

இது பற்றிய அனைவரின் கருத்துக்களையும் படித்தபின் காசி அவர்கள் அவரது கருத்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதுவரை பொறுத்திருத்தல் தான் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

மற்றொருமுறை அனைவருக்கும் நன்றி.

12 comments:

துளசி கோபால் said...

சுரேஷ்,

இந்தவார நட்சத்திரமா ஜொலிச்சீங்கதான். ஆனா அந்த வெளிச்சம் பக்கத்துலே எரிஞ்சுக்கிட்டிருந்த
(மற்றொரு கிரகமுன்னு சொல்லலாமா) ஒரு ச்சின்ன சூரியவெளிச்சத்தாலே கொஞ்சம் ஒளி இழந்து
போச்சு. எல்லாம் இருகோடு தத்துவம்தான்.

ஆனாலும் நல்லாச் செஞ்சிருந்தீங்க. நானும் தினமும் படிச்சுக்கிட்டுத்தான் வந்தேன். லண்டன் தொடரை
விட்டுராதீங்க.

கொஞ்சம் எரிஞ்சு அடங்குனபிறகு முழுவிவரமும் கிடைக்குமுன்னு நம்பறேன். எல்லாம் நம்ம தமிழ்மணம்
விவகாரம்தான்.

வாழ்த்துக்கள். நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
அக்கா

Arun Vaidyanathan said...

Suresh,
Lot of posts...Will read one by one soon. Totally busy prev week. I missed Dondu's Week too..Will catch up with all the posts.
I hope you enjoyed all the attention...Keep it up!

காசி (Kasi) said...

சுரேஷ்,

உங்கள் நட்சத்திர வாரத்துக்கு இடையில் எதிர்பாராமல் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறேன். உங்கள் எழுத்து தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

பினாத்தல் சுரேஷ் said...

Suresh, a good week overall.

I liked the thesappaRRu, aNmai Vs arugaamai posts very much.

Keep continuing London tips, may be useful for me early next year. (veettukku varalaam illaya?)

இளவஞ்சி said...

ஆர்ப்பாட்டமில்லாம ரொம்ப தன்மையா இருக்குங்க உங்க எழுத்து! UK பத்தி நிறைய எழுதுங்கன்றது என் வேண்டுகோள்! துளசியக்கா அவிங்க ஊருக்குன்னா நீங்க UKக்குன்ற மாதிரி.. :)

உங்க websiteம் அருமையா இருக்கு!

Suresh babu said...

துளசி அக்கா!,
அனைத்து பதிவுகளையும் படித்து பின்னூட்டமிட்டதற்கு உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

நன்றி அருண்,
திடீர் கவனிப்பு ஆரம்பத்தில் படு உற்சாகமாக இருந்தது. உண்மையிலேயே சுவாரசியமாக இருந்தது.

காசி,
இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை காசி. வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

நன்றி சுரேஷ்,
லண்டன் தொடரை தொடர்ந்து எழுதுவேன். வீட்டுக்கு வரலாமாவா?.. கட்டாயம் வரணும்.

இளவஞ்சி,
கண்டிப்பா இங்கு பார்க்கும் விஷயங்களை எழுதுவேன். உற்சாகப்படுத்தலுக்கு மிகவும் நன்றி.

வசந்தன்(Vasanthan) said...

நட்சத்திர வாரத்துக்கு நன்றி.

Suresh babu said...

நன்றி வசந்தன் !!!

Go.Ganesh said...

சுரேஷ் கடந்த வாரம் வேலைப்பளு காரணமாக தமிழ்மணத்திற்கு அடிக்கடி வர இயலவில்லை. உங்கள் பதிவுகளைப் படித்து பொறுமையாக பின்னூட்டமிடுகிறேன்.

Uma Krishna said...

Suresh, this is UmaKrishna here, we met at Deepavali party. How is Prakruti? I'm reading your blog for first time. Your 'Siru vayathu vilayaattugal' was very good. I thought I should mention to you that I'm from Madurai as well(Thirunagar). Party la unga jodi aattam romba nalla irundhadhu.

Dharumi said...

சுரேஷ்,
உங்கள் வாரத்தில் தமிழ்மணத்தில் நடந்த 'தடங்கல்களுக்காக' வருந்துகிறேன். கொஞ்சம் diversion ஆகிப்போச்சு. ஆனாலும் உங்கள் பதிவுகள் பெற வேண்டிய கவனத்தைப் பெற்றதாகவே நினைக்கிறேன்.

Suresh babu said...

நன்றி கணேஷ்,

வாங்க உமா!! ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் வலைப்பதிவுப்பக்கம் வருகிறேன். ஆமாம்.. தீபாவளிக்கொண்டாட்டம் ரொம்ப நல்லா இருந்தது.

தருமி சார்,

அவை எவற்றையும் நான் தடங்கல்கலாக நினைக்கவில்லை.. பின்னூட்டத்திற்கு நன்றி.