Saturday, July 23, 2005

இந்தியாவின் அருமை அமெரிக்காவிற்கு இப்போது புரிகிறது.

கடைசியில் இந்தியா போன்ற ஒரு சமத்துவத்தை விரும்பும் நாட்டின் அருமையை அமெரிக்க ஊடகங்கள் உணரத்தொடங்கி உள்ளன.

இன்று வாஷிங்டன் டைம்ஸில் வந்துள்ள கட்டுரையின் சுட்டி.

கட்டுரையில் இருந்து சில வரிகள்,

1) இந்தியாவின் மத ஒருமைப்பாட்டுக்கு ஒரு உதாரணம், இந்தியாவின் பிரதமர் ஒரு சீக்கியர், ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர், ஆளும் கட்சியின் தலைவர் ஒரு கிரிஸ்துவர், அவரது பிள்ளைகள் இந்துக்கள், முன்னாள் துணை ஜனாதிபதி ஒரு தலித்.
2) உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடு இந்தோனேசியாவுக்கு அடுத்தபடி இந்தியா தான், இருந்தாலும் இந்திய இஸ்லாமியர்கள் இது வரைக்கும் எந்தவிதமான தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை.
3) நீங்களே மற்றதை படித்துக்கொள்ளுங்கள் (சில சமயங்களில் மொழி பெயர்ப்பது கருத்தை சிதைத்து விடுகிறது)

அமெரிக்காவுக்கு இப்போதாவது நம் அருமை புரிந்ததே அது வரைக்கும் மகிழ்ச்சி. (அவர்களுக்கு புரிந்து இருக்காவிட்டாலும் நமக்கு கவலை இல்லை.. அது வேறு விஷயம்)

7 Comments:

Anonymous Anonymous said...

SO HOW COME INDIAN GOVERNMENT KILLED SO MANY INNOCENT SRILANKAN TAMILS?

July 23, 2005 10:35 pm  
Blogger Suresh said...

அனானிமஸ்,

எது உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதைப்பற்றி பேசி இதை திசை திருப்ப விரும்பவில்லை.

July 23, 2005 10:57 pm  
Blogger Srikanth Meenakshi said...

சுரேஷ், சுட்டி காட்டும் பத்திரிக்கை, வாஷிங்டன் போஸ்டல்ல, வாஷிங்டன் டைம்ஸ்... லண்டனிலிருந்து எல்லாம் ஒன்றாகத் தெரியலாம், ஆனால் பெரிய வித்தியாசமய்யா, பெரிய வித்தியாசம்!

July 24, 2005 3:23 am  
Blogger Suresh said...

நன்றி srikanth.

தவறை திருத்தி விட்டேன்.

July 24, 2005 10:43 am  
Blogger Machi said...

This comment has been removed by a blog administrator.

July 26, 2005 6:44 pm  
Blogger Machi said...

எல்லாம் காலத்தின் கட்டாயம். காரணம் என்னவாக இருப்பினும் வரவேற்க வேண்டிய நல்லுறவு. இதனால் அமெரிக்காவிற்கு 100 கோடி மக்கள் சந்தை, இந்தியாவிற்கு அமெரிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் வசதி, ஐயா நமக்கும் அமெரிக்க சந்தை, மறக்காதீர்கள் டாலர் கொட்டும் கணிப்பொறி வணிகத்தை.

July 26, 2005 6:45 pm  
Anonymous Anonymous said...

LTTE killed so many innocent tamils than indian government.

July 23, 2007 9:39 pm  

Post a Comment

<< Home