Monday, October 17, 2005

நட்சத்திரமா !!! நானா ???

உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. திடீரென்று மதி அவர்கள் அக்டோபர் மாதம் ஏதாவது ஒரு வாரத்திற்கு நட்சத்திரமாக இருக்க முடியுமா என்று கேட்டார்கள். ஏதோ ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டு விட்டேன். தருமி, டொண்டு போன்ற பழம் தின்று கொட்டை போட்ட பெரியவர்கள் நட்சத்திரமாக இருந்த வாரங்களுக்கு அடுத்தவாரம் என்று நினைக்கும்போது கொஞ்சம் கை நடுங்குகிறது.

பள்ளிப்படிப்பு படிக்கும்போதே எழுத்தில் ஆர்வம் இருந்ததாக ஞாபகம். சிறுவயதில் 'பாரதி' என்ற கையெழுத்துப்பத்திரிக்கை நடத்தினேன். வெறும் மூன்று பிரதிகள் மட்டும் வெளியிட்டு நிறுத்திவிட்டேன் (குமுதம் ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளின் போட்டியால்.. :-) கல்லூரி நாட்களில் அவ்வப்போது டயரியில் கிறுக்குவது உண்டு. அவ்வளவுதான் எழுத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு. ஆனால் நிறைய படிப்பது உண்டு. எழுத்தாளர் பாலகுமாரனின் பரம விசிறி. அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கிறேன். கடந்த ஒருவருடமாக அலுவலகத்தில் வேலை நெருக்கடி அவ்வளவாக இல்லாததால் எதுடா படிக்கக்கிடைக்கும் என்று ஏங்கியது உண்டு. கூகிள்-->தமிழோவியம்--> கிரிக்கெட்-->பத்ரியின் வலைப்பதிவு-->தமிழ்மணம் என்று தமிழ்மணத்தை முதன் முதலில் நுகர நேர்ந்தது. முதல் சில மாதங்கள் படித்தல் மற்றும் பிரதிபலித்தல் என்றே இருந்துவிட்டேன். ஒருநாள் தைரியம் வந்து சொந்தமாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்தவுடன் அதற்கு கிடைத்த வரவேற்பு மேலும் மேலும் உற்சாகத்தை கொடுத்தது.

எழுத ஆரம்பித்தவுடன் மறக்கமுடியாதது..

ஒரு நாள் எழுத்தாளர் மாலனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். நான் எழுதிய லண்டனில் குண்டுவெடிப்பு பற்றிய கட்டுரையை 'திசைகளில்' வெளியிடலாமா? என்று..... தலை கால் புரியவில்லை. அட நமது எழுத்துக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதே என்று ஒரே மகிழ்ச்சி. முதன் முதலில் அதை திசைகளில் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாருக்கும் சுட்டியை அனுப்பினேன். அப்போது தான் யாரோ ஒரு பெரியவர் 'நாம் எல்லாம் அங்கீகாரத்துக்கு ஏங்கும் பிச்சைக்காரர்கள்' என்று சொன்னதை உணர முடிந்தது.

சும்மாவே நான் தமிழ்மணம்-holic.. அலுவலகத்தில் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்மணத்திற்கு வந்து தலையை காட்டி விட்டுபோவது உண்டு. இந்தவாரம் தொடர்ந்து தினமும் எழுத வேண்டும் இல்லையா? அலுவலகத்தில் வேலை செய்தாற் போல் தான்... இது வரை இந்தவாரம் முழுவதும் என்ன எழுதுவது என்று திட்டமிடவில்லை.
முடிந்தவரை எழுதுகிறேன். தயவுசெய்து அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து முடிந்தால் முதுகில் தட்டிவிட்டோ அல்லது தலையில் கொட்டிவிட்டோ போங்கள்.

30 Comments:

Blogger Anand V said...

வாழ்த்துக்கள் !

October 17, 2005 5:13 am  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துக்கள் சுரேஷ் பாபு (my namesake)

பாத்தீங்களா அதுக்குள்ள ரெண்டு இங்கிலீஷ்காரங்க உங்க ப்ளாக்க பத்தி ஆஹா ஒஹோன்னு புகழ்ந்திருக்காங்க!

கலக்குங்க இந்த வாரம்.

October 17, 2005 5:16 am  
Anonymous Anonymous said...

welcome ...

October 17, 2005 5:19 am  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துக்கள் சுரேஷ் பாபு (my namesake)

அதுக்குள்ள ரெண்டு இங்க்ளீஷ் தொரைமாருங்க உங்களுக்கு ஆஹா ஒஹோன்னு கமெண்ட்டியிருக்காங்க!

கலக்குங்க இந்த வாரம். ஆபீஸெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்!

October 17, 2005 5:20 am  
Blogger rv said...

வாழ்த்துக்கள் சுரேஷ்..

October 17, 2005 5:26 am  
Blogger தருமி said...

சுரேஷ்,
கொட்டவோ, தட்டவோ?

முதலில் கொட்டு: உங்கள் பிறந்த நாள்: மே,2005-ல் என்றால் நான் 2005 ஏப்ரில் கடைசி வாரம்..நம்ம 'தமிழ்மணத்தில் பிறந்த'தைச் சொல்கிறேன்.அப்புறம் என்ன..பழம்தின்னு அது இதுன்னு பில்ட்-அப்? ஹும்...

தட்டு: நட்சத்திரமாக எப்போதும் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்.......

October 17, 2005 5:27 am  
Blogger துளசி கோபால் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்.

இங்கிலாந்து எப்படி இருக்கு? ராணியம்மா நலமா?

உங்க வீட்டு ராணியம்மாவும் நலமா?

October 17, 2005 6:08 am  
Anonymous Anonymous said...

Hi Suresh,

I am your blog's regular reader. But I have started giving comments recently. I feel you are eligible for the star of the week. Congragualtions. Waiting for your blogs....

Bye

Senthil Kumar, Pondicherry

October 17, 2005 6:13 am  
Blogger Ramya Nageswaran said...

வாழ்த்துக்கள், சுரேஷ்...இந்த வாரப் பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கறேன்!!

October 17, 2005 6:25 am  
Blogger Ganesh Gopalasubramanian said...

வாழ்த்துக்கள் நண்பரே.... கலக்குங்க.....

முதுகில் தட்டுவதற்கு தயாராக
கோ.கணேஷ்

October 17, 2005 6:25 am  
Blogger Kannan said...

வாழ்த்துக்கள் சுரேஷ்!

October 17, 2005 6:26 am  
Blogger வசந்தன்(Vasanthan) said...

வருக வருக

October 17, 2005 6:33 am  
Blogger ஜென்ராம் said...

வாழ்த்துக்கள் சுரேஷ்..
தேம்ஸ் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு வாரம் மட்டும் சேதம் ஏற்படுத்தாத வெள்ளம். நீர் மொள்ளக் காத்திருக்கிறோம்.

October 17, 2005 7:17 am  
Anonymous Anonymous said...

Vaazththukkal, Suresh , Aavaludan ethirpparkkirom!

October 17, 2005 7:24 am  
Blogger தெருத்தொண்டன் said...

வருக வருக சுரேஷ்.. உங்கள் நட்சத்திர வரவு நல்வரவாகுக! தலையில் கொட்டு அல்லது முதுகைல் தட்டு தான் வேண்டுமா? கன்னத்தில் கொஞ்சம் செல்லமாகக் கிள்ளக் கூடாதா?

October 17, 2005 7:28 am  
Blogger நளாயினி said...

வாழ்த்துக்கள் சுரேஸ் .

October 17, 2005 7:29 am  
Blogger அன்பு said...

வாழ்த்துக்கள் சுரேஸ். இதுவரை கலக்கலாத்தான எழுதிட்டிருக்கீங்க, இந்தவாரம் இன்னும் கலக்கிடுங்க. இங்கு படிப்பதெல்லாம் நண்பர்கள்தான், அதனால நட்சத்திரம், சூரியனெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

October 17, 2005 7:41 am  
Blogger தாணு said...

வாழ்த்துக்கள் சுரேஷ்,
சமீபத்தில் என் அண்ணன் லண்டன் போயிட்டுவந்து, அதன் ஏர்போர்ட் முதல் தேம்ஸ் நதிக்கரை வரை கவிதை போல் சொன்னான். துளசி மாதிரி நீங்களும் அதன் அருமை பெருமை பற்றி ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

October 17, 2005 7:51 am  
Blogger ramachandranusha(உஷா) said...

வாங்க நட்சத்திரமே, சூப்ரீம் நட்சத்திரமாக வாழ்த்துக்கள். தினமும் எழுதுங்க, படிக்க காத்திருக்கிறோம்

October 17, 2005 8:32 am  
Blogger Suresh said...

அடடா !! அதிகாலையில் எழுந்து பதிவைப் போட்டுவிட்டு ஒரு தூக்கம் தூங்கி எழுந்து பார்த்தால் இவ்வளவு பின்னூட்டங்களா !!....

ஆனந்த், பினாத்தல் சுரேஷ்,அனானிமஸ், மறுபடியும் சுரேஷ்,இராமநாதன், தருமி, துளசி அக்கா, செந்தில் குமார், ரம்யா, கணேஷ், கண்ணன், வசந்தன், ராம்கி, ஹமீதபுல்லா, தெருத்தொண்டன், நளாயினி, அன்பு, தாணு மற்றும் உஷா.. உங்கள் அனைவருக்கும் நன்றி.

தருமியின் கையால் முதலில் மோதிரக்குட்டு.. நன்றி..

துளசி அக்கா,
>>இங்கிலாந்து எப்படி இருக்கு? >>

இங்கிலாந்து நல்லா இருக்கு, கோடைகாலம் இப்போது தான் முடிந்து குளிர்காலம் ஆரம்பித்திருக்கிறது.
இரண்டு ராணி அம்மாக்களும் நலம் :-).

நிறைய பேர் முதல் முறையா வந்திருக்கீங்க.. ரொம்ப நன்றி.

October 17, 2005 9:57 am  
Blogger வானம்பாடி said...

வாழ்த்துக்கள் சுரேஷ், நிறைய எழுதுங்க

October 17, 2005 10:46 am  
Blogger குழலி / Kuzhali said...

வாழ்த்துக்கள் கலக்குங்க

October 17, 2005 11:05 am  
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள். தினமும் வந்து போகிறேன்.

October 17, 2005 2:48 pm  
Blogger Suresh said...

சுதர்சன், குழலி, குமரன்...அனைவருக்கும் நன்றி..

October 17, 2005 2:57 pm  
Blogger பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள் சுரேஷ்
நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள் :-)

October 17, 2005 4:03 pm  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நட்சத்திர வாரம் நன்கு அமைய மனப் பூர்வமான வாழ்த்துக்கள் சுரேஷ்!!!
ஏதாவது ஒருநாள் நல்ல உங்கள் பலமான தன்னம்பிக்கை பதிவிற்கு நான் காத்து இருக்கிறேன்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...

October 17, 2005 5:42 pm  
Blogger Pot"tea" kadai said...

வலையுலகின் நட்சத்திரம் சகோ.சுரேசு...எழுதுக! எழுதுக! எங்கள் கண் குளிர எழுதுக!

நன்றி!
சத்யா.

October 17, 2005 9:30 pm  
Blogger Suresh said...

ஜோதி, சிவா, சத்யா !!!

வாழ்த்துக்களுக்கு நன்றி.

October 17, 2005 10:11 pm  
Blogger G.Ragavan said...

வாழ்த்துகள் சுரேஷ். நட்சத்திர சுரேஷாகி விட்டீர்கள். கலக்குங்கள்.

October 18, 2005 2:04 pm  
Blogger Suresh said...

நன்றி ராகவன்...

October 18, 2005 3:31 pm  

Post a Comment

<< Home