Friday, November 11, 2005

சிவகாசியும்... விகடன் விமர்சனமும்..

நேற்று தான் சிவகாசி படம் பார்த்தேன். இன்று விகடன் விமர்சனம் பார்க்க நேர்ந்தது.. விகடன் பார்த்தவுடன் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி... சிவகாசி படத்திற்கு 42 மதிப்பெண்கள். சத்தியமாக நம்ப முடியவில்லை.

இவ்வளவு நாள் விகடன் விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்க்கும் பெரும்பாலானவர்களில் ஒருவனாக இருந்தேன்.. சிவகாசி படத்திற்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்களைப்பார்க்கும்போது விகடனின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நிலைமை உண்டானது..

என் அனுபவத்தில் சிவகாசி அப்படி ஒரு மகா மட்டமான படம்... இந்த படம் மட்டும் நன்றாக ஓடிவிட்டால் அவ்வளவுதான்...இதே போல் 'தென்காசி' 'வடகாசி' என்று வரிசையாக பத்து படங்கள் வருவது உறுதி.

இந்த படத்தை பற்றி விரிவாக எழுதி உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களின் சகிப்புத்தன்மையின் எல்லை எவ்வளவு தூரம் என்று தெரியவேண்டும் என்று பார்க்கவேண்டுமானால் ஒரு முறை இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

நான் சொல்லி கேட்கவா போறீங்க... என்னவோ போங்க... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!!

24 comments:

யாத்திரீகன் said...

சிவகாசிக்கே இப்படினா

மஜா, குண்டக்க மண்டக்க, அது ஒரு கனாக்காலம், சாணக்யா-னு

இந்திய திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்த படங்களை பொறுமையாக பாருங்கள் சுரேஷ் ;-)

பி.கு:
>> யாம் பெற்ற இன்பம் பெறுக

இந்த வரி ரொம்ப நல்லா இருக்கே ;-)))

சிங். செயகுமார். said...

ஏங்க சிவகாசிக்கு என்ன குறைச்சல்
ஆண்டி பட்டி மேட்டர அப்பிடிதான் சொல்ல முடியும்
ஹைடெக்கா கேட்டிங்கண்ணா ஷங்கரதான் புடிக்கனும்

மூர்த்தி said...

ஒருமுறை பார்க்கலாம்.

துளசி கோபால் said...

சுரேஷ்,

தென்காசி(பட்டினம்)னு ஒரு படம் ஏற்கெனவே வந்துருக்கு.

இப்பெல்லாம் விகடன் மார்க்கைப் பார்த்து நம்பிறக்கூடாது. சினிமாவை வச்சுப் பிழைக்கறாங்கப்பு. அப்ப நன்றி உணர்வு வேணுமா இல்லையா?

அதனாலே எல்லாருக்கும் மார்க் நாப்பதுக்கு மேலேதான்:-))))

Dharumi said...

என் அனுபவத்தில் சிவகாசி அப்படி ஒரு மகா மட்டமான படம்...//-

தப்பு சுரேஷ் தப்பு...திராபை, குப்பை, lousy, studpid etc..etc..இப்படி கொஞ்சம் ஏதாவது சேர்க்கணும்.

இதில என்னன்னா , யாத்ரீகன், செயகுமார், மூர்த்தி - இவங்க எல்லாம் கோவிச்சுக்ககூடாது- நீங்களே இப்படி சொன்னா..என்னத்த சொல்றது போங்க. நீங்க தான் இங்கிலீசு படங்கள மாஞ்சு மாஞ்சு பாத்து பயங்கர analysis கொடுக்கிறீங்க. தமிழ்ப் படம்னு வந்துட்டா, ஒரே ஹீரோ worshipதான். எந்தக் குப்பைன்னாலும் உக்காந்து ரசிக்கிறீங்க. என்னமோ போங்க இப்போதைக்கு நம்ம தமிழ் சினிமா தேறப்போறதில்லை; தேறவும் விடமாட்டீங்க. கொஞ்சம் மாறணும்'ங்க... நீங்களும், நானும்...

Dharumi said...

சுரேஷ்,
இதையும் சேத்துக்கிறேனே! எனது இந்தப் பதிவில் இதைப் பற்றிக் கூறியது: ஜன ரஞ்சகப் பத்திரிகைகள் வாசகர்களைத் தரை மட்ட ரசிகர்கள் என்ற நினைப்பிலேயே எழுதப்படும் குப்பைகள். நான் கொஞ்சம் வாசிக்கும் ஆனந்த விகடன் கல்லூரிகளில் உள்ள சில ஆசிரியர்கள் மதிப்பெண்கள் போடுவது போல மார்க் போடுகிறார்கள். குறைவாகப் போட்டால்தானே மாணவன் என்ன இது என்று ஒருவேளை ஏதாவது கேட்கக்கூடும். எல்லோருக்கும் அள்ளிப் போட்டுவிட்டால் எல்லோருக்கும் பிடித்த ‘நல்ல வாத்தியாராக’ இருக்கலாமே, அது மாதிரி என்ன குப்பையாக இருந்தாலும் 35-40 என்று போட்டு, நல்ல படமாக இருந்தாலும் 49 என்று போட்டு விட்டால் சரியாப் போச்சு என்ற தத்துவம்!

முத்து(தமிழினி) said...

சத்தியமான விமர்சனம். ஆனால் தமிழ்மணத்தில் இருக்கிற எல்லோரும் தரத்தை மட்டும்தான் ரசிப்பாங்கன்னு எதை வைத்து நினைச்சீங்க?
விகடனும் மாறி ரொம்ப நாளாச்சி

Dharumi said...

கொஞ்சம் இங்கேயும் வாங்களேன்.

சினேகிதி said...

ena nadukuthu inga?? suresh ipathan unga pathivai padichen.unmaya solli irukringal.

"யாம் பெற்ற இன்பம் பெறுக " ithu yaru sonathu??

dharumi neenga enna free ad podurikringa thanks.

பினாத்தல் சுரேஷ் said...

Vikatan can not risk against the cine field, which is its 85% source of sustinence.

How can it tell sivakasi is run-of-the mill with "with love vijay" as its main serial?

tbr.joseph said...

இப்பத்தான் சிநேகிதியின் பதிவில் சம்பத் என்பவர் எழுதியதைப் படித்தேன்.

நானும் முத்துவின் பதிவில் என் கருத்தை பின்னூட்டமாய் இட்டிருந்தேன். அவர் சிவகாசி படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் எழுதியிருந்தார்.

நீங்களும் உங்கள் ஆதங்கத்தை எழுதியிருக்கிறீர்கள்..

துளசி எழுதியிருப்பதுபோல விகடனும் இப்போதெல்லாம் பாரபட்சத்துடன் எழுதுவதுபோல்தான் தெரிகிறது.

நானும் ஒரு காலத்தில் விகடனின் ரசிகனாயிருந்தேன்.

காலப்போக்கில் எல்லோருமே தடம் மாற ஆரம்பித்துவிட்டார்கள்.

சிவகாசி மட்டுமல்ல. எனக்கு தெரிந்து கடந்த மூன்று நான்காண்டுகளாய் (காதலுக்கு மரியாதையை தவிர்த்து) விஜய் நடித்து வெளிவந்த எல்லா படங்களுமே குப்பைதான்.

அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

பாமரர்களின் நாயகன் என்று ஒரு பட்டமே கொடுக்கலாம்.

Suresh babu said...

செந்தில்,

இன்னும் அந்தப்படங்களை பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

நன்றி சிங்.செயகுமார், மூர்த்தி..

துளசி அக்கா சரியாகச்சொன்னீங்க !!

நன்றி தருமி சார்.. உங்கள் ஆதங்கம் முற்றிலும் சரி...

ஆமாம் முத்து.. விகடன் மாறி ரொம்ப நாள் ஆச்சு..

சினேகிதி,

>>யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

இது சித்தர்கள் சொன்னது என்று நினைக்கிறேன்.

சுரேஷ்,

பேசாமல் ஆனந்த விகடன் அதன் பெயரை 'சினிமா விகடன்' என்று மாற்றிக்கொண்டு விடலாம்.

கருத்துக்களுக்கு நன்றி ஜோசப் சார்!!

balgans said...

Sivakasi mattum millai ella kuppaikalume ippodhu thamizhil than varukinrena.

Rajesh@Detroit said...

Suresh Babu,

First time to u r blog. Great job. I noticed ur efforts during our college days (writing tamil poems and reading Balakumaran before semester exams…. J ). you turned out pretty good at this….So far… L Our shanmugha memories written here ….are good…especially reading that in tamil…feels good… Please write about Indian’s lifestyle in UK.

Good Luck Buddy!
Rajesh Krishnamurthy

சினேகிதி said...

ya u r rite Suresh,
amma sonava athu Thirumoolar sonatham.

donotspam said...

எனக்கென்னமோ விகடன் குழுவினர் அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன் என்று தனி தனி இதழ்களாய் பிரிந்த மாதிரி ஒரு இதழ் ஆரம்பிக்கலாம்.

சினிமா விகடனில் வரும் சீரியஸ் விஷயங்களை இதில் தள்ளி விடலாம். அதற்கான பொருளாதார சக்தி, வாசகர் வட்டம் மற்றும் brand identity விகடன் குழுவினரிடம் இருக்கிறது. நுனிப்புல் மேய வாசகர்கள் இருப்பதைப் போல் அடிவேர் தேடும் வாசகன் கணிசமான அளவில் இருக்கிறான் என்பதை மனதில் வைத்து இந்த எண்ணம்.

யாரோ ஒருவர் இந்த மாதிரி middle magazine முயற்சி எடுப்பதை விட இவர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும். குமுதம் இதை புரிந்து, தீராநதி நன்றாக நடத்தி வருகினறனர். இந்த எளிய முயற்சி அவர்களுக்கு அழகாக கை கூடி வரும் என்பதும் என் நம்பிக்கை.

ஜோ / Joe said...

//How can it tell sivakasi is run-of-the mill with "with love vijay" as its main serial?//

Plain and simple.This is the reason.

Dharumi said...

ஆனந்தவிகடனின் மதிப்பீடு:
சிவகாசி : 42
மஜா : 41
இது ஒரு கனாக் காலம்: 40

எனது மதிப்பீடு ( % ):
சிவகாசி : 19
மஜா : 21
இது ஒரு கனாக் காலம்: 49

ramachandranusha said...

சுரேஷ், இந்த படத்தின் கமெண்டை சிநேகிதி அவர்கள் பதிவில் பார்க்கவும் :-), முத்துவும் இதேப் போல ஒரு பதிவுப் போட்டுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரு சின்ன விஷயம், தயவு செய்து தவறாய் நினைக்காதீர்கள்? படம் மசாலா என்று
தெரிந்தும் பார்த்துவிட்டு ஏன் திட்டுகிறீர்கள்?
அன்று எம்.ஜி.ஆர், பிறகு ரஜினி இன்று அதே வழியில் விஜய் "பெண் குல பெருமையை எடுத்து சொல்வதும், பெண்கள்
எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் " என்று டயலாக் பேசி ( நன்றி நேற்று காதில் விழுந்த சூப்பர் சீன்ஸ்- ஜெ டீவி)
அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக முயற்சி செய்கிறார். தியேட்டருக்கு வரும் விசிலடிச்சான் குஞ்சுகள்தான் நாளை ஒட்டும் போட போகிறார்கள்.
சில சமயம் மிகவும் போர் அடித்தால் இத்தகைய குப்பைகளை மெல்ல விடியோவில் வந்ததும் எடுத்துப் பார்ப்பது.
ஆ.வியைப் பற்றி துளசி அடித்த கமெண்டை வழி மொழிகிறேன். ஆனா கல்கியும் அதே வழியில் அடி எடுத்து வைப்பது வருத்தமாய் உள்ளது.

Pot"tea" kadai said...

நா இன்னும் "சிவகாசி" படம் பாக்கல. பாத்து பணத்தையும், நேரத்தையும் வீணாக்க மாட்டேன். "மஜா" ஒரே மலையாள கலர்..."மும்பை எக்ஸ்பிரஸ்" ஐ கரிச்சி கொட்டின கூட்டம் "மஜா" வை எப்பிடி ரசிச்சிதுங்கன்ன எனக்குப் புரியல.

"அது ஒரு கனாக் காலம்" - பாக்கலாம்...பாலு மகேந்திரா அவர்களின் ஓளிப்பதிவிற்காகவும், இளையராஜாவின் "இரு" பாடல்கள் மற்றும் பின்னனி இசை, தாவணியில் வந்து பின்னியெடுக்கும் "ப்ரியாமணி"யின் யதார்த்தமான நடிப்பிற்காகவும்... (கண்களால் கைது செய் படத்தில் நடிச்ச புள்ளையா அது, என கண்களை விரிய வைக்கிறார்)எனக்கு ப்ரியாமணி மேல " க்ரஷ்" வந்துச்சே...

நானும் போடரேன் மார்க்கு
சிவகாசி : hopeless
மஜா : 20
அது ஒரு கனாக் காலம்: 50

தருமி, அது "இது ஒரு கனாக் காலம்" இல்லை...
"அது ஒரு கனாக் காலம்" :))

நன்றி!
சத்யா

Suresh babu said...

நன்றி balgans,

ராஜேஷ்.. பார்த்து ரொம்ப நாள் ஆகுது.. இங்கு வலைப்பதிவில் பார்ப்பதில் மகிழ்ச்சி.

நன்றி சினேகிதி,

அது திருமூலர் சொன்னதுன்னு நீங்க சொல்லிதான் தெரிஞ்சது.

ரொம்ப சரியா சொன்னீங்க ஈஸ்வர். நன்றி.

நன்றி ஜோ!!

நன்றி தருமி சார்!!
என்னுடைய கணிப்பின்படி,
சிவகாசி - 37 -38

நன்றி உஷா !!
என்னுடைய ஆதங்கம் சிவகாசி படத்தைப்பற்றியதற்கும் மேலாக அந்த படத்தைப்பற்றிய விகடன் விமர்சனத்தைப்பற்றியது.

வாங்க சத்யா!!

எல்லா படங்களும் பாத்தாச்சு போல?

>>எனக்கு ப்ரியாமணி மேல " க்ரஷ்" வந்துச்சே...

:-))

siva said...

Ungallukku Vijay pidikatti parava illai...
he is earning 7 crores..
he is no.1 choice for producers and dictributors..
he dont have to satisfy you A-class people..

geetha said...

Look who is talking.... You are the one who said "KUSHI" is a good movie!?

I dont agree with 50 first dates movie review. Thats not a great movie. Wait for that movie to be shown in TNT or TBS for free. I think you are slowly changing your taste to watch some serious movies. If thats the case, let me suggest you some good movies.

a) Miracle on the 34th Street
b) Kevin Bacon's "First Murder"
c) Chameli (hindi)
d) Raincoat (hindi)

-BGK

ernesto said...

ada poongapa.. mumbai express pola tamil cinema la oru nalla humer sence ulla padam ithuvarikum pathailla.athula vara humers ellam really dif and konjam deep apurinjukanaum..but intervel munadithan padam supperr.