50 First Dates - பட விமர்சனம்
ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்த்தபின்னரும் படத்தைப்பற்றி சிந்தித்து அசை போட வைத்த ஒரு படம். ரொம்ப சீரியசான ஒரு படம் என்று நினைக்க வேண்டாம். அதிகம் அலட்டிக்கொள்ளாத அருமையான ஒரு படம்.
சார்லிஸ் ஏஞ்சல்ஸில் ஒருவரான Drew Barrrymore-ம் Adam Sandler -ம் நடித்துள்ளனர். கதை முழுவதும் ஹாவாய் தீவில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளரை எப்படி பாராட்டுவது?

படத்தின் நாயகி ஒரு விபத்தினால் மூளையில் அடிபட்டு Short term memory loss என்னும் வியாதியால் பாதிக்கப்பட்டவள். விபத்துக்கு பின்பு நடக்கும் அத்தனை சம்பவங்களும் தினமும் அவள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும்.
ஒரு நாள் நாயகியை ஒரு உணவகத்தில் சந்திக்க நேரும்போது நாயகன் அவள் மீது ஈர்க்கப்பட்டு தினமும் சந்திக்க நேர்ந்து, நாயகியின் தந்தை மற்றும் அண்ணனின் மூலம் அவளது வியாதி பற்றிய உண்மையை அறிய நேர்கிறது. அறிந்த பின் நாயகியின் மீது இன்னும் ஈர்ப்பு கூடுகிறது.
அதன் பின் தினமும் நாயகனும் நாயகியும் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் சுவையாக அமைக்கப் பட்டிருக்கிறன. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரது கதாபாத்திரங்களும் மனதில் பதியும் படி அமைக்கப்பட்டிருக்கிறன.
படம் பார்த்தவுடம் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். உரையாடல் சுவையாக இருந்தது.
கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

10 Comments:
சமீபத்தில் வந்த ஆடம் சாண்ட்லர் குப்பைகளில் ஓகேவென்று சொல்லத்தக்க படம். GroundHog Day is better anyday..
அப்படியே சமீபத்தில் வெளிவந்த Casablanca, Shining போன்றவற்றிற்கும் விமர்சனம் போடுவீங்களா?? :P
//படத்தின் புகைப்பிடிப்பாளரை எப்படி பாராட்டுவது?
//
*ஒளிப்பதிவாளரைச்* சொல்றீங்களா சுரேஷ்?
ஆடம் சாண்ட்லரின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் மென்மையான படங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். Spanglish பாத்தீங்களா? தூள் படம். Anger Management-இல் ஜாக் நிக்கல்ஸனோட சேந்து நல்லா பண்ணிருருப்பாரு. நேரம் கிடைச்சா பாத்துட்டுச் சொல்லுங்க.
கற்பனைப் பஞ்சம் தலை விரித்து ஆடற தமிழ்த் திரைப்படக் கதாசிரியர்கள் இந்த மாதிரிப் படங்களைப் பாத்தா, ஒரு சின்ன முடிச்சு வச்சுக்கிட்டு, பிரம்மாண்டங்கள் இல்லாம, குறைஞ்ச செலவுல, தரமான படங்கள் எப்படி எடுக்கறதுன்னு புரிஞ்சுக்குவாங்க.
விமர்சனத்தை இன்னும் கொஞ்சம் விரிவா எழுத முயற்சி பண்ணுங்க. சில முக்கியச் சம்பவங்களைக் குறிப்பிடுங்க.
அன்புடன்
சுந்தர்.
---தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் ---
அதே... அதே... :-))
தமிழுக்கு மிகவும் பொருத்தமான ரொமாண்டிக் காமெடி
shorttem memory loss, multiple persnolity disorder, split personality disorder, அப்படின்னு ஏற்கனவே தமிழ்ல குதற்ரது பத்தாதா? கஜினி படம் என்ன நீங்க சொன்ன first item base பண்ணதுதான்.
நன்றி இராமநாதன் :-)
>>அப்படியே சமீபத்தில் வெளிவந்த Casablanca, Shining போன்றவற்றிற்கும் விமர்சனம் போடுவீங்களா?? :P
:-)))
நன்றி சுந்தர்,
நீங்கள் சொன்ன படங்களை இன்னும் பார்க்க வில்லை. கண்டிப்பாக விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.
நன்றி பாலா,
தமிழில் கண்டிப்பாக ஒரு நாள் வரும்.. எப்படி எடுக்கிறார்கள் என்று பார்போம் :-)
வெளிகண்ட நாதர்,
கஜினி படம் 'Memento' படத்தின் தமிழாக்கம் தான்.
//படத்தின் புகைப்பிடிப்பாளரை எப்படி பாராட்டுவது?
//*ஒளிப்பதிவாளரைச்* சொல்றீங்களா சுரேஷ்?
நன்றி சுந்தர், தவறை திருத்திவிட்டேன்.
Hi,
Isn't "GroundHog Day" a Bill Murray movie?
கலகலப்பான படம். 2004ல் சத்யத்தில் பார்த்தேன்.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் பலரை சென்றடைந்திருக்கும்.
தமிழில் எல்லா இயக்குநர்களும் பார்த்திருப்பார்கள். வேறு வேலை.
புதிய, புதிய கதைகள், களங்கள் என்றா படம் எடுக்கிறார்கள்?
திரும்ப, திரும்ப காதல், கத்திரிக்காய் என்று தானே எடுத்து தள்ளுகிறார்கள்.
Movie for relax time . I think this movie concept( diwali with Jeyam Ravi and bhava ) has been copied already into to tamil
//வெளிகண்ட நாதர்,
கஜினி படம் 'Memento' படத்தின் தமிழாக்கம் தான்.//
It is not direct copy . concept and some scenes has been copied . Dont compare Momento with Gajini .
RC
படம் பார்த்துட வேண்டியது தான்..
Post a Comment
<< Home