Thursday, December 01, 2005

பிபிசி தமிழோசையின் பாட்டொன்று கேட்டேன்

ஆஹா!! எவ்வளவு அருமையான ஒரு நிகழ்ச்சி. லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு கலந்து கொண்டவர்கள் அனைவரும் தொடர்பில் இருப்பதாக முடிவெடுத்து டுபுக்கு ஒரு யாஹூ குழுமம் ஆரம்பித்தார். அதில் ரோஹினி வெங்கடஸ்வாமி அவர்கள் 'பாட்டொன்று கேட்டேன்' பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். அறிமுகப்படுத்தியதற்கு அவருக்கு முதலில் நன்றி.

இது வரைக்கும் அறுபது பகுதிகள் வெளியாகி இருக்கின்றன. அனைத்து பகுதிகளுக்கும் சுட்டிகள் பிபிசி தமிழ் இணையத்தளத்தில் இன்றும் கேட்க கிடைக்கின்றன. இதோ சுட்டி உங்களுக்காக.

சம்பத் குமார் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். எனக்குத்தெரிந்ததெல்லாம் இளையராஜாவிற்கு பிறகான தமிழ் திரையிசையைப்பற்றித் தான். அதற்கு முன்பான தமிழ் திரையிசை வரலாற்றினைப்பற்றிய ஒலித்தொகுப்பை இசையுடன் கேட்கும்போது ரொம்பவே மகிழ்சியாக இருந்தது. ஏன்?.. இளையராஜாவின் இசையில் வெவ்வேறு பாடகர்கள் பாடிய பாடகர்கள் பாடிய பாடல்களை சம்பத் குமார் அவர்கள் தொகுத்து வழங்குவதை கேட்கும்போது அதைப்பற்றிய பல விஷயங்கள் தெரிய வந்தன.

நிகழ்ச்சி இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. நிகழ்சியைப்பற்றி மேலும் தகவல்களை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. நீங்களே கேட்டுப் பாருங்கள்.

9 comments:

வசந்தன்(Vasanthan) said...

ம். அது அருமையான நிகழ்ச்சி. அதேபோல் ஆழும் அரிதாரம் என்ற நிகழ்ச்சியும் அருமை. குஸ்புவுக்குக் கோயில் கட்டியவர், எம்.ஜி.ஆருக்குக் கோயில் கட்டியவர்களையெல்லாம் செவ்வி கண்டிருந்தார்கள். தற்போதைய விஜயகாந்தின் அரசியல் பிரவேசம்கூட அந்நிகழ்ச்சியில் வருகிறது.

போன கிழமைதான் ஒரு நேயர், இவை வீணாண நிகழ்ச்சிகள் எனவும், இந்த நேரத்தை வேறுவழியில் பயன்படுத்தலாமெனவும் கடிதம் எழுதியிருந்தார். எனக்கு உண்மையில் அக்கடிதம் ஆச்சரியத்தை அளித்தது.

வாசன் said...

தகவலுக்கு மிக்க நன்றி.

- வாசன்

G.Ragavan said...

நமக்கெல்லாம் கே.எல் ரேடியோதான். அதுதான இங்க கெடைக்குது. அதுல நல்ல பாட்டுகளும் நடுநடுவுல தகவல்களும் சொல்றாங்க.

யாத்திரீகன் said...

செய்திக்கு நன்றி சுரேஷ்..

அந்த தொகுத்து வழங்கும் குரல் மிகவும் அருமை.. மறுபடியும் ரேடியோ கேட்குற அனுபவம் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு..

ஒரே நாள்ல.. 9 தொகுப்புகளை கேட்டுட்டேன்.. :-D

-
செந்தில்/Senthil

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

kevinmartinez03367750 said...
This comment has been removed by a blog administrator.
Balaji S Rajan said...

சற்று விரிவாக இன்று உங்கள் பதிவு படித்தேன். மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Suresh babu said...

நன்றி வசந்தன்,வாசன்,ராகவன், செந்தில், கல்வெட்டு.

Suresh babu said...

நன்றி பாலாஜி.