Sunday, November 13, 2005

50 First Dates - பட விமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்த்தபின்னரும் படத்தைப்பற்றி சிந்தித்து அசை போட வைத்த ஒரு படம். ரொம்ப சீரியசான ஒரு படம் என்று நினைக்க வேண்டாம். அதிகம் அலட்டிக்கொள்ளாத அருமையான ஒரு படம்.

சார்லிஸ் ஏஞ்சல்ஸில் ஒருவரான Drew Barrrymore-ம் Adam Sandler -ம் நடித்துள்ளனர். கதை முழுவதும் ஹாவாய் தீவில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளரை எப்படி பாராட்டுவது?



படத்தின் நாயகி ஒரு விபத்தினால் மூளையில் அடிபட்டு Short term memory loss என்னும் வியாதியால் பாதிக்கப்பட்டவள். விபத்துக்கு பின்பு நடக்கும் அத்தனை சம்பவங்களும் தினமும் அவள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும்.

ஒரு நாள் நாயகியை ஒரு உணவகத்தில் சந்திக்க நேரும்போது நாயகன் அவள் மீது ஈர்க்கப்பட்டு தினமும் சந்திக்க நேர்ந்து, நாயகியின் தந்தை மற்றும் அண்ணனின் மூலம் அவளது வியாதி பற்றிய உண்மையை அறிய நேர்கிறது. அறிந்த பின் நாயகியின் மீது இன்னும் ஈர்ப்பு கூடுகிறது.

அதன் பின் தினமும் நாயகனும் நாயகியும் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் சுவையாக அமைக்கப் பட்டிருக்கிறன. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரது கதாபாத்திரங்களும் மனதில் பதியும் படி அமைக்கப்பட்டிருக்கிறன.

படம் பார்த்தவுடம் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். உரையாடல் சுவையாக இருந்தது.

கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

Friday, November 11, 2005

சிவகாசியும்... விகடன் விமர்சனமும்..

நேற்று தான் சிவகாசி படம் பார்த்தேன். இன்று விகடன் விமர்சனம் பார்க்க நேர்ந்தது.. விகடன் பார்த்தவுடன் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி... சிவகாசி படத்திற்கு 42 மதிப்பெண்கள். சத்தியமாக நம்ப முடியவில்லை.

இவ்வளவு நாள் விகடன் விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்க்கும் பெரும்பாலானவர்களில் ஒருவனாக இருந்தேன்.. சிவகாசி படத்திற்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்களைப்பார்க்கும்போது விகடனின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நிலைமை உண்டானது..

என் அனுபவத்தில் சிவகாசி அப்படி ஒரு மகா மட்டமான படம்... இந்த படம் மட்டும் நன்றாக ஓடிவிட்டால் அவ்வளவுதான்...இதே போல் 'தென்காசி' 'வடகாசி' என்று வரிசையாக பத்து படங்கள் வருவது உறுதி.

இந்த படத்தை பற்றி விரிவாக எழுதி உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களின் சகிப்புத்தன்மையின் எல்லை எவ்வளவு தூரம் என்று தெரியவேண்டும் என்று பார்க்கவேண்டுமானால் ஒரு முறை இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

நான் சொல்லி கேட்கவா போறீங்க... என்னவோ போங்க... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!!

Monday, November 07, 2005

அப்பா!! தமிழ்மணம் பாத்து எவ்வளவு நாளாச்சு?

நட்சத்திர வாரத்தை அடுத்து, அலுவலக புதிய வேலைப்பளு, தீபாவளிக் கொண்டாட்டம், ஒரு வாரம் பாரிஸ் விடுமுறைப் பயணம் என்று இரண்டு வாரங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எதையோ தவற விட்டுவிட்டது போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது தான் உண்மை.

பாரிஸ் பயணம் பற்றி நிறைய எழுத வேண்டும்....ஆஹா!! எவ்வளவு அருமையான ஊர்...பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். பயணக்களைப்பு.. அப்புறம் நிறைய எழுதுகிறேன்.. இப்போது.. சில புகைப்படங்கள்.

Louvre ஓவியக்கூடத்தின் முன்பு,





ஈஃபில் டவரின் சில காட்சிகள்,








மைக்கெல் ஏஞ்சலோவின் ஒரு சிற்பம்,



Louvre ஓவியக்கூடத்தின் மேற்கூரை,



லியார்னோ டாவின்சியின் மற்றுமொரு ஓவியம்,



Louvre ஓவியக்கூடத்திற்கு எதிரில் ஒரு காட்சி,



பாரிஸின் புறநகரிலிலுள்ள ஒரு சர்ச்,



டிஸ்னிலாண்டில் சில காட்சிகள்,







வானுயர்ந்த கட்டிடங்கள்,









மனதைக் கவர்ந்த சில காட்சிகள்,