உப்புமா.....
----சிவாஜி:----
ஏய் சக்தி...
நாந்தேன்...
இங்கிட்டு வா....
ஹோட்டலுக்கு போனீகளா?
----கமல்----
ஆமா அய்யா...
----சிவாஜி----
ஹோட்டல்ல உப்புமா போடக்கூடாதுன்னு சண்ட போட்டிகளே... இப்ப இந்த ஊரோட உப்புமா பாசம்புரிஞ்சதா?
----கமல்----
நல்லாவே புரியுது... நாஞ்செஞ்ச தப்பும் புரியுது....அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாமுன்னு இருக்கேன்...
----சிவாஜி----
ஊர விட்டு போறீகளா?... நடந்ததுக்கு பரிகாரமா உப்புமா போடாம, ஊர விட்டுப்போறேன்னு சொல்லுறது கொழத்தனமா இல்ல?
----கமல்----
அதுக்காக....
----சிவாஜி----
அதுக்காக????
----கமல்----
அதுக்காக உப்புமா பண்ணுறது ஈசியா இருக்குன்னு தெனமும் உப்புமா சாப்புட்டுகிட்டு இருக்குறது முட்டாள்தனம்...
----சிவாஜி----
இந்த உப்புமா சாப்புடுற கூட்டத்துல ஒ அப்பனும் ஒருத்தன் தானுன்னு மறந்துடாத...
----கமல்----
அப்புடி பாத்தா நானுந்தாயா ஒருத்தன்... ஆனா அத நெனச்சு பெரும பட முடியல...
எரநூறு வருசமா உப்புமா சாப்புட்டுக்கிட்டு இருக்குற இந்த கிராமத்துல நான் இட்லி சாப்டாம இருக்க விரும்பல அய்யா...
----சிவாஜி----
எரநூறு வருசம் உப்புமா தான் சாப்பிட்டுகிட்டு இருக்கோமுன்னுதான் ஒத்துக்குறேன்.... ரெண்டாயிரம் வருசமா ரவையையும் காய்கறியையும் தூக்கிகிட்டு, உப்புமா, கேசரின்னு சாப்புட்டுகிட்டு இருந்த பயக...
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சமைக்குரதுக்கு ஆள் வேணுமுன்னு கேட்டப்ப... ஓடிப்போயி முதல் வரிசையில ரவையோட நின்ன முக்காவாசி பயக நம்ம பயகதேன்.
திடீருன்னு அவன உப்புமாவ தூக்கி போட்டுட்டு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்ட வாடான்னா எப்டி வருவான்? நீ நெறைய சாப்டவனாச்சே....
கூட்டிட்டு வா.... அவனுக்கு சூடா இட்லி அவிச்சு போடு.... ஆனா அந்தப்பய மெதுவாதான் சாப்ப்டுவான்... மெதுவாதா சாப்டுவான்...
----கமல்----
மெதுவான்னா எம்புட்டு மெதுவாயா... அதுக்குள்ள நானே போயி சமைக்க ஆரம்பிச்சுடுவேன் போல இருக்கே...
----சிவாஜி----
போ... சமச்ச்சுட்டு போ....நா தடுக்க முடியுமா?.... எல்லா பய புள்ளைகளும் ஒருநாளக்கி சமைக்க வேண்டியது தேங்... சமைக்குறது முக்கியந்தாங்... இல்லையின்னு சொல்லல....
ஆனா மத்தவங்களுக்கு உப்புமா பண்ணி குடுத்துட்டு செத்து போறது தான் அந்த சமையலுக்கே பெரும... கோதுமைய வெதச்ச ஒடனே உப்புமா சாப்புடனுன்னு நெனைக்க முடியுமோ...
இன்னைக்கு நா வெதைக்குறேங்... நாளைக்கு நீ ரவா உப்புமா சாப்பிடுவ... அப்புறம்... ஓ மவன் சாப்புடுவான்... அதுக்கு அப்புறம்... அவன் மவன் சாப்புடுவான்.... அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்...
ஆனா ரவ... நான் போட்டது.... இதெல்லாம் எனக்கு பெருமையா? ஹேங்.... கடம..... ஒவ்வொருத்தனோட கடம...
----கமல்----
ஆனா இந்த உப்புமால ரவ போடுற வரைக்கும் எவ்வளவு சமைச்சாலும் வெளங்காதுயா.... என்ன விட்டுரங்கய்யா... நா போறே...
(மியூசிக்)
----சிவாஜி----
இட்லியோட சாம்பார இட்டு கட்டி அடிச்சுட்டு, நெஞ்சு நிமித்தி அய்யாவ பேசுற வயசுல்ல்ல....
----கமல்----
இல்ல அப்படி இல்ல அய்யா...
----சிவாஜி----
வேற எப்படி? வேற எப்படின்னு கேக்குறேன்.... தாயில்லாத புள்ளயாச்சேன்னு இட்லியா ஊட்டி ஊட்டி வளத்தேன்ல.... உனக்கு பிடிக்கலைன்னு இதுவரைக்கும் ஒரு வாய் உப்புமா ஊட்டியிருப்பேனா? ஒரு வாய் உப்புமா?
நா... எங்கடமைய சென்சுபுட்டேன்... நீ ஒங் கடமைய செஞ்சியா? நீ பெருசா லண்டன்ல பீட்சாவும் பர்கரும் சாப்புடுரதுக்காக...இந்த பூமியில கோதுமையா வெதச்சு பணம் அனுப்பிச்சமே.... அந்த காட்டுமிராண்டி பசங்களுக்கு என்ன பண்ணுன நீயி??
ஏதாவது பண்ணு... அதுக்கப்புறம் வீட்ட விட்டுப்போ.... ஹோட்டல் வையி...ரெஸ்டாரண்டு வையி... அப்புறம் அந்த தெளுங்கச்சிய கலியாணம் பண்ணிக்க.......சேந்து இட்லி சாப்புடு....என்ன இப்போ.... போயேன்....
----கமல்----
நல்ல உப்புமா இங்க இருந்து தான் சாப்புடணும்னு இல்ல அய்யா.... வெளிய போயும் இட்லி சாப்புடலாம்.... நா போயி சாப்புடறேன் அய்யா...
----சிவாஜி----
சாப்புட்டுட்டு வரேன்னு சொல்லுகளேன்.... அந்த நம்பிக்க தா வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம்....
ஏய்.... எங்கையா சமயக்காரேன்.....ஏல யாருரா இவன்... எங்கய்யா சமயக்காரேன்....
----சமையல் காரர்----
அய்யா....
----சிவாஜி----
இங்கதா இருக்கியா....
அய்யா... இட்லி சாப்புடுரதுக்காக வெளியூரு போறாகளாம்... ரொம்ப நாள் இங்க இருந்து உப்புமா சாப்பிட மாட்டாங்களாம்...
அவுகளுக்கு இட்லி பண்ணி போடு...
----சமையல் காரர்----
ஒரு பத்து நாள் செண்டு இட்லி பண்னட்டுங்க்களா?
----சிவாஜி----
ஏனப்பு... ஒரு பத்து நாள் உப்புமா சாப்புட மாட்டீகளா?
(உக்கார வைத்து)
பத்து நாள் இருக்க மாட்டீகளா? ஏன் மகன பக்கத்துல வச்சுகிட்டு உப்புமா செஞ்சு போடணுமுனு ஆச எனக்கு இருக்காதா????
நீங்க ஊரெல்லாம் போயி சாப்டு வருறப்ப... அய்யா சாப்பிட்டு வருறேம்பீக... ஹ்ம்....
----கமல்----
உங்கள விட்டுட்டு சாப்புட போகலையா.... நா போயி இட்லி கடை போட்டுட்டு உங்களையும் கூட்ட்டுட்டு போறேங்க அய்யா....
----சிவாஜி----
என்னையா?....ஹ்ம்... ஹ் ஹ்ம்... இந்த கட்ட இங்கயே எரிஞ்சு வெந்து சாம்பலாகி இந்த மண்ணுக்கு ஓரமாகுமே தவிர.... வெளிய வராது....
இந்த உப்புமாவ சட்டியோட கொட்டிடாதப்பா.... அம்புட்டு தான் நா சொல்லுவேன்... புரியுதா....
----கமல்----
அய்யா... நா இந்த ஊருக்கு ஒரு நாள் உப்புமா செஞ்சு போடுவேன் அய்யா... என்ன நம்புங்க....
----சிவாஜி----
ஒங்கள தானே நம்பனும்.... இந்த வீட்டுல யாரு இருக்க எனக்கப்புறம் உப்புமா சாப்புட?
(அழுகை)
போ....
--
BGM
போற்றி சாப்பிடடி பொண்னே.... உப்புமா சாப்புடாதவன் வாயில் மண்ணே.....
(உப்புமா பிரியர்கள் சங்கம்)