How to eat an elephant? - Part 8
யாருக்காவது விடை தெரியுமா?....விடை சுலபம். 'By cutting in to small pieces'.
அது எதற்காக சொல்லுவதென்றால், எந்த ஒரு குறிக்கோள் மற்றும் லட்சியம் அனைத்தும் முதலில் பார்ப்பதற்கு யானையைப்போல் பெரிதாகத்தான் இருக்கும். ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகளை சிறு சிறு short term goal-களாக மாற்றிவிடுங்கள். அதன் பிறகு short term Goal-களை தினசரி வேலைகளாக மாற்றி திட்டமிடுவது தான் லட்சியத்தை அடைவதற்கான ஒரே வழி.
Stephen covey சொல்லியிருப்பார்,
'efficiency' மற்றும் 'effectiveness' இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.
efficiency என்பது செய்யும் வேலையை சரியாக செய்வது. effectiveness என்பது சரியான வேலையை செய்வது.
எனவே முதலில் சரியான வேலையை செய்ய வேண்டும் அடுத்து அந்த சரியான வேலையை சரியாக செய்யவேண்டும். படிக்க கொஞ்சம் விசுத்தனமாக இருப்பதற்கு மன்னிக்கவும்.
சரி நாம் செய்யும் வேலை சரியாக இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது?
அது நமது வாழ்க்கை லட்சியம் இருக்கும் திசையை சார்ந்து இருக்கிறதா என்றுதான். அதை செய்வதால் ஏதேனும் நமது வாழ்க்கைக்கு value addition எதுவும் இருக்கிறதா என்று தான்.
கீழிருக்கும் படத்தைப்பாருங்கள். இந்தப்படத்தில் மேலே இருப்பது வாழ்க்கையின் லட்சியம். அது சிறு சிறு குறிக்கோள்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த குறிக்கோள்கள் சிறு சிறு திட்டமிடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக நம் வாழ்க்கையின் லட்சியம் ஒரு பெரிய தொழிலதிபராவது என்று வைத்துக்கொள்வோம்.
குறிக்கோள்களாக கீழ்க்கண்டவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
1) எந்த துறையில் தொழில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்வது.
2) தொழில் சம்பந்தமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வது
3) தொழிலுக்கு தேவையான மூல தனத்தை திரட்டுவது.
4) சிறிய அளவில் தொழிற்சாலை ஆரம்பிப்பது.
5) தொழிற்சாலையை விரிவு படுத்துவது.
அதற்கு அடுத்த அளவில் ஒவ்வொன்றையும் தினசரி திட்டமிடல்களாக மாற்றலாம்,
1) தொழில் சம்பந்தமான புத்தகங்களை படித்தல்.
2) பகுதி நேர நிர்வாக சம்பந்தமான படிப்பு பற்றி விசாரித்தல்
3) வங்கிகளில் முதலீடு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல்.
4)......
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது ஒரு எளிய எடுத்துக்காட்டு.
பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருக்கும்போது கலந்து கொண்ட ஒரு பயிற்சி முகாமில் இது பற்றிய ஒரு Role Play இருந்தது. அதை முடித்தவுடன் எனக்குத்தெரிந்த ஒருவர் ITC யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அருமையான வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக தொழில் ஆரம்பித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், @நான் சிகரெட் தொழிற்சாலையில் செய்து கொண்டிருக்கும் வேலை எனது personal value system-க்கு எதிராக இருக்கிறது. அதனால் என்னுடைய குறிக்கோளை என்னுடைய value system-க்கு தகுந்தது போல் அமைத்துக்கொண்டுள்ளேன்" என்றுதான்.
இன்றே தனிமையில் அமருவோம், நம்மை பற்றி நாமே ஒரு சுய ஆராய்ச்சி பண்ணுவோம். நம்மை நாமே கேட்போம் நாம் என்னவாக ஆக விரும்புகிறோம் என்று... என்ன சாதிக்க விரும்புகிறோம் என்று.. அதன் பின்பு அது பற்றி கனவுகாண்போம். நமது சிந்தனைகளை அது பற்றியே சுழல விடுவோம். பின்பு அது பற்றிய சிந்தனைகளை பட்டியலிடுவோம்... சிறிது சிறிதாக செயல்படுத்துவோம். அந்த சிறிய சிறிய வெற்றிகள் தரும் நம்பிக்கை நம்மை நம் லட்சியத்திற்கு வெகு சீக்கிரத்தில் எடுத்துச்செல்லும்....